தமிழ்நாடு

கொரோனாவிற்கு தமிழகத்தில் மதுரையில் முதல் பலி! - அதிர்ச்சி தகவல்

கொரோனா பாதிப்புடன் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது முதியவர் நேற்றைய தினம் உயிரிழந்ததாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. 536 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 11 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மேலும், தமிழகத்திலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 15 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் நேற்றைய தினம் முதியவர் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நபர் சிகிச்சை பலன்றி உயிரிழந்தார்.

நேற்று மாலையிலிருந்து அளிக்கப்படும் சிகிச்சைக்கு அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை, தங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம்; சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்டவை இருந்த நிலையில் கொரோனா தொற்றும் ஏற்பட்டது” என தெரிவித்துள்ளார்.

இதனால் கொரோனாவால் தமிழகத்தில் ஏற்பட்ட முதல் பலியாகும். இந்த சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories