தமிழ்நாடு

கொரோனா பீதி: “இன்று மட்டும் சுங்கக்கட்டணத்தை ரத்து செய்யலாம்” - தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை பரிந்துரை

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்க இன்று ஒருநாள் விதிவிலக்கு வழங்க தமிழக அரசு பரிசீலிக்கலாம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்,

கொரோனா பீதி: “இன்று மட்டும் சுங்கக்கட்டணத்தை ரத்து செய்யலாம்” - தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை பரிந்துரை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்க இன்று ஒருநாள் விதிவிலக்கு அளிக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் ராஜகோபால் தாக்கல் செய்த முறையீட்டில் “கொரோனா பாதிப்பு எதிரொலியாக தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது. இந்த உத்தரவு மார்ச் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சென்னையிலிருந்து தென் தமிழகத்தை நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் வாகனங்களில் தற்போது சென்றுல் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு வரும் வாகனங்களை தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தி சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா பீதி: “இன்று மட்டும் சுங்கக்கட்டணத்தை ரத்து செய்யலாம்” - தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை பரிந்துரை

இந்த சுங்கக்கட்டண வசூல் மையங்களில் குறைந்தது அரைமணி நேரத்திலிருந்து ஒருமணி நேரம் வரை ஒவ்வொரு வாகனமும் நின்று வருவதால் நோய்க் கிருமிகள் தொற்ற வாய்ப்புள்ளது. எனவே உடனடியாக இன்று ஒருநாள் மட்டும் சுங்கக்கட்டணம் வசூலிக்க விதிவிலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் சுந்தர் அமர்வில் இந்த முறையீட்டை முன்வைக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, இன்று ஒருநாள் சுங்கக்கட்டணம் வசூலிப்பதிலிருந்து விலக்கு அளிக்க தமிழக அரசு பரிசீலிக்கலாம் என தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories