தமிழ்நாடு

“புராதனம் - நினைவுச் சின்னத்திற்கு அர்த்தம் தெரியாத அமைச்சர் பாண்டியராஜன்”: தங்கம் தென்னரசு ஆவேசம்!

தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களை மத்திய தொல்லியல் துறை கைப்பற்ற நினைத்தால் தி.மு.க வேடிக்கை பார்க்காது என முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

“புராதனம் - நினைவுச் சின்னத்திற்கு அர்த்தம் தெரியாத அமைச்சர் பாண்டியராஜன்”: தங்கம் தென்னரசு ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள புரதான கோயில்களை மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, தமிழக தொல்லியல் துறை ஆய்வறிஞர்கள், தொல்லியல் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு கூறியதாவது :

“தி.மு.க தலைவர் சொன்ன கருத்தான ‘புராதனம் மற்றும் நினைவு சின்னம்’ என்ற வார்த்தைகளுக்கு வெவ்வேறு அர்த்தம் உள்ளது. ஆனால் அதனைப் புரிந்துக்கொள்ளாமல் அடிப்படை அறிவு இல்லாமல் பேசியிருக்கிறார் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன்.

மேலும், மத்திய தொல்லியல் துறை தமிழகத்தில் உள்ள மக்கள் வழிபாட்டில் இருக்கும் 7 ஆயிரம் கோயில்களையும் இக்கோயில்களுக்கு சொந்தமான 4 லட்சம் ஏக்கர் மற்றும் பல கலை வளங்களையும் உள்நோக்கத்தோடு அபகரிக்க நினைக்கிறது. இதனை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. இதன்மூலம் தலை சொன்னதை கை செய்யும் என்பதை பாண்டியராஜன் நிரூபித்திருக்கிறார்.

மத்திய அரசின் செயலை தி.மு.க வன்மையாக எதிர்க்கிறது; கடுமையாக கண்டிக்கிறது. வழிபாட்டுத் தலங்களாக உள்ள திருக்கோயில்களை காட்சிப் பொருளாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை அனுமதிக்கமாட்டோம். தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களை மத்திய தொல்லியல் துறை கைப்பற்ற நினைத்தால் தி.மு.க வேடிக்கை பார்க்காது; எதிர்த்துப் போராடும்” என எச்சரிக்கை விடுத்தார்.

banner

Related Stories

Related Stories