தமிழ்நாடு

சென்னையின் ஷாஹீன்பாக்கில் ‘இந்து’ பெண்ணுக்கு வளைகாப்பு நடத்திய இஸ்லாமியர்கள்! - நெகிழ்ச்சி சம்பவம்!

சி.ஏ.ஏவுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடைபெற்று வரும்போது ‘இந்து’ பெண்ணுக்கு இஸ்லாமியர்கள் வளைகாப்பு நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையின் ஷாஹீன்பாக்கில் ‘இந்து’ பெண்ணுக்கு வளைகாப்பு நடத்திய இஸ்லாமியர்கள்! - நெகிழ்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக டெல்லி ஷாஹீன்பாக் பகுதியில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக இஸ்லாமியர்கள் போராடி வருவது போல, சென்னையின் ஷாஹீன்பாக் என அழைக்கப்படும் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் 13 நாட்களாக தொடர்ந்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அறவழியில் போராடி வந்த இஸ்லாமியர்கள் மீது எடப்பாடியின் காவல்துறை தாக்குதலில் ஈடுபட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இஸ்லாமிய அமைப்புகள் பல்வேறு போராட்டத்தில் இறங்கின.

சென்னையின் ஷாஹீன்பாக்கில் ‘இந்து’ பெண்ணுக்கு வளைகாப்பு நடத்திய இஸ்லாமியர்கள்! - நெகிழ்ச்சி சம்பவம்!

பின்னர், சட்டமன்றத்தில் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி., என்.பி.ஆர் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக் கோரி லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் சென்னையில் கூடி மாபெரும் பேரணியில் ஈடுபட்டனர்.

அதன் பிறகு வண்ணாரப்பேட்டை, மண்ணடி பகுதியில் நடைபெறும் போராட்டத்தின் போது இந்து-முஸ்லிம் நட்புறவை பலப்படுத்தும் வகையிலும், மதவாத சக்திகளின் முகத்தில் கரியைப் பூசும் வகையிலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், திருமணங்களும் நடத்தப்பட்டது.

சென்னையின் ஷாஹீன்பாக்கில் ‘இந்து’ பெண்ணுக்கு வளைகாப்பு நடத்திய இஸ்லாமியர்கள்! - நெகிழ்ச்சி சம்பவம்!

இந்நிலையில் போராட்டத்தின் 13வது நாளான இன்று, பாக்கியலட்சுமி என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு வண்ணாரப்பேட்டை போராட்டக்களத்தில் இந்து மத முறைப்படி வளைகாப்பு நிகழ்வை இஸ்லாமியர்கள் நடத்தினர்.

அப்போது, பாக்கியலட்சுமிக்கு வளையல் அணிவித்து இஸ்லாமிய பெண்கள் வாழ்த்தினர். மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட தாம்பூல பையில், இஸ்லாமியர்கள் அனைவரும் எங்கள் தொப்புள் கொடி உறவுகளே என்றும், No CAA , No NRC , No NPR என்ற வாசகங்களும் அச்சிடப்பட்டது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

சென்னையின் ஷாஹீன்பாக்கில் ‘இந்து’ பெண்ணுக்கு வளைகாப்பு நடத்திய இஸ்லாமியர்கள்! - நெகிழ்ச்சி சம்பவம்!

மேலும், வளைகாப்பு நடத்தப்பட்ட பெண்ணுடன் இஸ்லாமிய பெண்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். எச்.ராஜா உள்ளிட்ட மதவாத வன்முறையை ஏற்படுத்த நினைக்கும் பா.ஜ.கவினருக்கு இந்த நிகழ்வு ஒரு சம்மட்டி அடியாக இருக்கும்.

banner

Related Stories

Related Stories