தமிழ்நாடு

“CAAவால் பாதிக்கப்பட்டிருந்தால் ரூ.1 கோடி பரிசு?” : பா.ஜ.க-வை பங்கமாக கலாய்த்த நெட்டிசன்கள்!

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாராவது பாதிக்கப்பட்டிருப்பதாக நிரூபித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு என அறிவித்த பா.ஜ.கவினரை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

“CAAவால் பாதிக்கப்பட்டிருந்தால் ரூ.1 கோடி பரிசு?” : பா.ஜ.க-வை பங்கமாக கலாய்த்த நெட்டிசன்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

CAA, NRC சட்டத்துக்கு எதிராகவும் NPR பணிகளை தொடங்கக் கூடாது என்றும் வலியுறுத்தி நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அசாமில் தொடங்கிய இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து நாட்டின் ஒவ்வொரு மாநிலங்களிலும் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லி ஷாஹீன் பாக்கில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பெண்கள் போராடி வரும் நிலையில், சென்னையின் பழைய வண்ணாரப்பேட்டை, மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து 6வது நாளாக இரவு பகல் பாராமல் இஸ்லாமிய மக்கள் போராடி வருகின்றனர்.

சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் சென்னையில் மாபெரும் பேரணியிலும் இன்று ஈடுபட்டனர். இந்நிலையில், தமிழகத்தில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், பா.ஜ.கவினர் ஒட்டியுள்ள போஸ்டர் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களின் கடுமையான கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.

அந்த போஸ்டரில், குடியுரிமை சட்டத்திருத்தத்தால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அதனை ஆதாரப்பூர்வமாக நிரூபிப்பவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

“CAAவால் பாதிக்கப்பட்டிருந்தால் ரூ.1 கோடி பரிசு?” : பா.ஜ.க-வை பங்கமாக கலாய்த்த நெட்டிசன்கள்!

இதற்கு, “ஏற்கெனவே மோடி கொடுத்த 15 லட்சம் ரூபாயை எந்த பேங்க்ல போட்றதுனு தெரியாம இருக்கோம்” , “நீங்க கொடுத்த 15 லட்சத்தையே இன்னும் செலவு பண்ண முடியல... அதுக்குள்ள ஒரு கோடியா” என பா.ஜ.கவை தாறுமாறாக நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories