தமிழ்நாடு

சிறப்பு வகுப்பின்போது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளர் : கடலூரில் அதிர்ச்சி சம்பவம்!

கடலூரில் சிறப்பு வகுப்பின்போது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளர் மீது போலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு வகுப்பின்போது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளர் : கடலூரில் அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலை அடுத்துள்ள அறந்தாங்கியில் புனித அந்தோணியார் தனியார் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்தப் பள்ளியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மரிய விக்டோ என்பவர் விடுதிகளில் நடைபெறும் சிறப்பு வகுப்பின்போது பயிற்சிக்கு வரும் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் இதுதொடர்பாக பள்ளி ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆனால், மரிய விக்டோ பள்ளியின் தாளாளர் என்பதால் ஆசிரியர்கள் கண்டுகொள்ளாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவிகள் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். இதனையடுத்து முதலமைச்சரின் தனிப்பிரிவு, இதுகுறித்து விசாரிக்க மாவட்ட ஆட்சியரை அறிவுறுத்தியுள்ளது.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவில் பேரில் வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் சமூக நலப் பாதுகாப்பு தாசில்தார் ஆகியோர் பள்ளிக்குச் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். மேலும், சோழவரம் போலிஸாரும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி தாளாளரே, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தால் அப்பகுதி பெற்றோர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டி வருகின்றனர். உரிய முறையில் விசாரணை செய்து, தாளாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories