தமிழ்நாடு

’LKG சேர்க்கைக்கே தேர்வு இருக்கே..’ : 5,8 பொதுத்தேர்வு குறித்த கேள்விக்கு கல்வி அமைச்சரின் அடடே பதில் !

எதிர்காலத்தை கருத்தில்கொண்டே 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார்.

’LKG சேர்க்கைக்கே தேர்வு இருக்கே..’ : 5,8 பொதுத்தேர்வு குறித்த கேள்விக்கு கல்வி அமைச்சரின் அடடே பதில் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கல்வித்துறையில் நீட் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை கொண்டு வந்து மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இன்னல்களை கொடுத்து வந்த மத்திய, மாநில அரசுகள் தற்போது 5 மற்றும் 8ம் வகுப்பு பள்ளிக்குழந்தைகளுக்கும் பொதுத்தேர்வை அறிவித்து பெற்றோர்களையும், குழந்தைகளையும் அச்சுறுத்தி வருகிறது.

இந்த பொதுத்தேர்வு அறிவிப்பால் பலர் பள்ளிக்கல்வியையே இடைநிற்றல் செய்யும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என கல்வியலாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “ஏழை எளிய மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காகவே 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் தோல்வி அடைய மாட்டார்கள் 100க்கு 100 தேர்ச்சியே பெறுவார்கள்.

எல்.கே.ஜி படிக்கும் குழந்தைகளுக்கும் நுழைவுத் தேர்வு வைக்கப்பட்டு வருகிறது. ஆகையால் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது” என பேசியுள்ளார்.

கல்வித்தரத்தை மேம்படுத்துகிறேன் என்று கூறிக்கொண்டு, கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகளின் ஆரம்பக் கல்விக்கே ஆபத்து விளைவிக்கும் வகையிலேயே அரசின் இந்த பொதுத்தேர்வு அறிவிப்பு அமைந்துள்ளது என விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories