தமிழ்நாடு

பெரியகோவிலுக்கு தமிழ் வழியில் குடமுழுக்கு நடத்தாவிட்டால் போராட்டம் நடக்கும் - எச்சரிக்கும் அமைப்புகள் !

பெரிய கோயிலின் குடமுழுக்கு விழாவை தமிழ் மரபு வழியில் நடத்த வலியுறுத்தி தஞ்சாவூரில் பெரியகோவில் உரிமை மீட்புக்குழு சார்பில் நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெரியகோவிலுக்கு தமிழ் வழியில் குடமுழுக்கு நடத்தாவிட்டால் போராட்டம் நடக்கும் - எச்சரிக்கும் அமைப்புகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தஞ்சை பெரிய கோயில் மீட்புக்குழு சார்பில் கோரிக்கை மாநாடு நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டில் பல்வேறு தமிழறிஞர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

23 ஆண்டுகளுக்கு பின், வரும் பிப்ரவரி 5ம் தேதி நடத்தப்பட உள்ள தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழாவை தமிழ்மரபு வழி நடத்திட வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

பெரியகோவிலுக்கு தமிழ் வழியில் குடமுழுக்கு நடத்தாவிட்டால் போராட்டம் நடக்கும் - எச்சரிக்கும் அமைப்புகள் !

இதற்கிடையே, தஞ்சை பெரிய கோயிலில் தமிழ் மரபுவழி குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்கப்படாவிட்டால், தமிழகம் முழுவதும் மக்களை திரட்டி போராட்டங்கள் நடத்தப்படும் என்று பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவை தமிழ் மொழியில் நடத்திட வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories