தமிழ்நாடு

பரோல் நிறைவுற்று மீண்டும் சிறைக்கு சென்றார் பேரறிவாளன்; அற்புதம்மாள் உருக்கம்!

2 மாத கால பரோல் இன்றுடன் முடிவடைந்ததால் பேரறிவாளன் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பரோல் நிறைவுற்று மீண்டும் சிறைக்கு சென்றார் பேரறிவாளன்; அற்புதம்மாள் உருக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் ஃபயஸ் ஆகிய எழுவரும் சுமார் 28 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இதில், பேரறிவாளனின் தந்தை உடல் நிலை சரியில்லாததாலும், தங்கையின் மகள் திருமண நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக பேரறிவாளனுக்கு பரோல் வழங்க தமிழக அரசிடம் அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை வைத்தார்.

பரோல் நிறைவுற்று மீண்டும் சிறைக்கு சென்றார் பேரறிவாளன்; அற்புதம்மாள் உருக்கம்!

அதன்படி, அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியது சிறைத்துறை. அதனையடுத்து பரோலில் வெளிவந்த பேரறிவாளர் சகோதரியின் மகள் இணையேற்பு விழாவில் கலந்துக்கொண்டு பறை இசைத்து மகிழ்ச்சியாக இருந்தார்.

அதனையடுத்து, தந்தை குயில்தாசனின் உடல்நிலை மோசமானதால் மேலும் ஒரு மாதம் பரோல் வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் பிறகு பேரறிவாளனின் பரோல் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், 2 மாத பரோல் இன்றுடன் நிறைவுற்ற நிலையில், மீண்டும் பேரறிவாளன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து உருக்கத்துடன் பேசினார் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்.

பரோல் நிறைவுற்று மீண்டும் சிறைக்கு சென்றார் பேரறிவாளன்; அற்புதம்மாள் உருக்கம்!

அதில், “எந்தக் குற்றமும் செய்யாமல் என் மகன் கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். இந்த ஆண்டாவது எங்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவார் என எதிர்ப்பார்த்தோம். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உங்கள் மகன் உங்களிடம் திரும்புவார் என கூறினார்.

அந்த நம்பிக்கையில்தான் என் மகன் விடுதலை ஆவார் என எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன். ஆனால் தற்போது பரோல் காலம் முடிந்து மீண்டும் சிறைக்கு செல்வது வேதனையாக உள்ளது. என் மகனுடைய வாக்குமூலத்தை மாற்றி அளித்துவிட்டேன் என வழக்கை விசாரித்த அதிகாரி தானாக முன்வந்து தெளிவு படுத்திவிட்டார். என் மகன் எந்த தவறும் செய்யாமல் 29 ஆண்டுகளாக சிறையில் அடைப்பட்டுள்ளார்.

பரோல் நிறைவுற்று மீண்டும் சிறைக்கு சென்றார் பேரறிவாளன்; அற்புதம்மாள் உருக்கம்!

குற்றமற்றவர் என்பதை நிரூபித்தும் அவருக்கு விடுதலை மறுக்கப்பட்டுள்ளது. என் மகன் விரைவில் விடுதலையாகி என்னுடைய கடைசி காலத்திலாவது என்னுடன் இருக்க வேண்டும்.” இவ்வாறு அற்புதம்மாள் பேசியுள்ளார்.

banner

Related Stories

Related Stories