தமிழ்நாடு

"மாற்றத்திற்கு வித்திடுவதில் தி.மு.கவே தொடக்கப்புள்ளி": திருநங்கை ரியா வெற்றி குறித்து கனிமொழி பெருமிதம்!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம் 2வது வார்டு ஒன்றியக் குழு தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட திருநங்கை ரியா 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

"மாற்றத்திற்கு வித்திடுவதில் தி.மு.கவே தொடக்கப்புள்ளி": திருநங்கை ரியா வெற்றி குறித்து கனிமொழி பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கான தேர்தல் கடந்த டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 315 மையங்களில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. இந்த தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட திருநங்கை ரியா வெற்றி பெற்றுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக் குழுவில் 14 வார்டுகள் உள்ளன. இதில் 2-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவி எஸ்.சி. பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. அந்த வார்டில் தி.மு.க சார்பில் அன்பரசன் - சின்னபாப்பா தம்பதியரின் மகள் திருநங்கை ரியா வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக்குழு 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு, தி.மு.க சார்பில் போட்டியிட்ட திருநங்கை ரியா 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திருநங்கை ரியா இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் திருநங்கை ஆவார்.

ரியா வெற்றிபெற்றதற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. திருநங்கை ரியா வெற்றி பெற்றது குறித்து தி.மு.க மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அதில், “நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு 2வது வார்டு ஒன்றியக் கவுன்சிலராக தி.மு.க வேட்பாளர் திருநங்கை ரியா வெற்றி பெற்றிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள்.

திருநங்கைகளுக்கு இதுபோன்ற சமூக அங்கீகாரங்கள் தொடர வேண்டும். மாற்றத்திற்கு வித்திடுவதில், எப்போதும் தொடக்கப் புள்ளியாக தி.மு.க திகழ்கிறது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories