தமிழ்நாடு

உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத மாநில தேர்தல் ஆணையத்துக்கு எதிராக தி.மு.க வழக்கு!

மாநில தேர்தல் ஆணையருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத மாநில தேர்தல் ஆணையத்துக்கு எதிராக தி.மு.க வழக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், 2011ம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தேர்தலை நடத்த உத்தரவிட்டிருந்தது. மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்த 3 மாத கால அவகாசம் அளித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், 2011ம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையரின் செயலுக்கு எதிராக தி.மு.க சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி இடஒதுக்கீடு வழங்கப்பட்டு முறையாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என தி.மு.க வலியுறுத்தியுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories