முரசொலி தலையங்கம்

எடப்பாடியின் கட்டப் பஞ்சாயத்துப்படி நடக்கும் உள்ளாட்சித் தேர்தல் – முரசொலி தலையங்கம்!

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை மூன்று ஆண்டுகள் நடத்தாமல் தாமதம் செய்தார்கள். இப்போது முப்பது நாட்கள் கூட பொறுக்கமுடியாமல் அவசரம் காட்டுகிறார்கள். உள்ளாட்சி தேர்தலைப் பொறுத்தவரையில் எடப்பாடி அரசு செய்வது அனைத்தும் சந்தேகத்துக்குரியதாகவே இருக்கிறது.

கடந்த 2016-ம் ஆண்டு அக்டோர் மாதமே உள்ளாட்சி தேர்தலை நடத்தியிருக்கவேண்டும். ஆனால் அதனை அப்போது நடத்தவில்லை. அதற்கு காரணம் மக்களைப் பார்த்து பயம்தான். இப்போது எதற்காக கிராமத்தில் மட்டும் தேர்தல், நகரத்தில் இல்லை என்கிறார்கள்? என்றால் அதற்கும் காரணம் மக்களின் மீதுள்ள பயம் தான். அதனால் முறையாக தேர்தல் விதிமுறைகளை அ.தி.மு.க அரசு பின்பற்றத் தவறுகிறது.

மேலும், பட்டியல் இனம், பழங்குடியினரின் உரிமை காப்பாற்றப்படும் வகையில், அவர்களுக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்க வேண்டும். பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் முறையாகச் செய்யப்பட்டு இருக்கவேண்டும்.

இதையெல்லாம் செய்துவிட்டு தேர்தல் நடத்தினால்தால் அதற்கு பஞ்சாயத்துராஜ் சட்டப்படி நடக்கும் தேர்தல் என்று பொருள். ஆனால் தற்போது பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி நடக்கும் தேர்தல் அல்ல. எடப்பாடியின் கட்டப் பஞ்சாயத்துப்படி நடக்கும் தேர்தல் என முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது.

banner