தமிழ்நாடு

“குரூப்-1 தேர்வில் மதிப்பெண்களை திருத்த திட்டம்?” - வெளிப்படையாக நடைபெறும் மோசடி என வைகோ குற்றச்சாட்டு!

TNPSC தேர்வில் மிகப்பெரும் மோசடி நடைபெறுகிறது என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

“குரூப்-1 தேர்வில் மதிப்பெண்களை திருத்த திட்டம்?” - வெளிப்படையாக நடைபெறும் மோசடி என வைகோ குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் மிகப்பெரும் மோசடி நடைபெறுகிறது என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம், குரூப்-1 பணிகளுக்கான முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுடைய பட்டியலை வெளியிட்டிருக்கிறது. துணை ஆட்சியர்கள், காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் பொறுப்புக்காக நடைபெறுகின்ற இந்தத் தேர்விற்கான நேர்காணல், வருகின்ற டிசம்பர் 23ம் தேதி முதல் நடைபெறுகிறது.

அதில் கலந்து கொள்பவர்களுடைய மதிப்பெண்களை, பேனாவால் எழுதக்கூடாது; கண்டிப்பாகப் பென்சிலால் மட்டுமே எழுதவேண்டும் என, தேர்வு ஆணைய உறுப்பினர்களுக்கு தமிழக அரசு, அறிவுறுத்தி இருப்பதாக அறிகிறேன்.

மதிப்பெண்களைத் திருத்தி, தங்களுக்கு வேண்டியவர்களைத் தேர்வு செய்வதற்காக, இத்தகைய ஏற்பாடு நடைபெற்று வருகின்றது. இந்த 21ம் நூற்றாண்டில், கணினிகளின் காலத்தில், வெளிப்படையாக ஒரு மோசடி நடைபெற இருக்கிறது. அதையும், தமிழக அரசே நடத்தப் போகிறது என்பது மிகவும் வேதனைக்குரியது.

கிராமப்புறங்களைச் சேர்ந்த, ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த, எந்தப் பின்புலமும் இல்லாத, தகுதி வாய்ந்த இளைஞர்களின் வாழ்க்கையோடு விளையாடுகின்ற இந்தக் கொடுமை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மதிப்பெண்களைக் கணினியில் மட்டுமே பதிவு செய்யவேண்டும். அனைத்து நேர்காணல்களையும், காணொளிப் பதிவு செய்யவேண்டும் என வலியுறுத்துகின்றேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories