தமிழ்நாடு

பெட்ரோலிய பொருட்களுக்கு ஒரே வரி எப்போது? : ஒரே நாடு என்று சொல்வது ஏமாற்று வேலையா ?- தி.மு.க எம்.பி கேள்வி

பெட்ரோலிய பொருட்கள் ஜி.எஸ்.டி வரம்புகள் கொடுவரப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்தார். இந்த உறுதியை நிதி அமைச்சர் எப்போது அளிப்பார் என தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெட்ரோலிய பொருட்களுக்கு ஒரே வரி எப்போது? : ஒரே நாடு என்று சொல்வது ஏமாற்று வேலையா ?- தி.மு.க எம்.பி கேள்வி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் நாட்டின் பொருளாதாரம் குறித்து மக்களவை கேள்வி நேரத்தில் தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் பேசினார்.

அப்போது, “நாட்டின் பொருளதாரம் அதளபாதாளத்திற்குச் சென்றுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (GDP) வரலாற்றில் இல்லாத அளவிற்கு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இந்தச் சூழலில் ’ஒரே நாடு, ஒரே வரி’ என நாம் பேசிவருகிறோம். ஆனால் பெட்ரோலியப் பொருட்களுக்கு மட்டும் வெவ்வேறு வரிகள் விதிக்கப்படுகின்றன. முன்னதாக GST அமல்படுத்திய போது, பெட்ரோலியப் பொருட்கள் ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுப்வரப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்தார்.

ஆனால், அது இன்னும் நடக்கவில்லை. இந்த உறுதியை நிதி அமைச்சர் எப்போது அளிப்பார். பெட்ரோலியப் பொருட்களுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பது எப்போது அமலுக்கு வரும்?” எனக் கேள்வி எழுப்பினார்.

பெட்ரோலிய பொருட்களுக்கு ஒரே வரி எப்போது? : ஒரே நாடு என்று சொல்வது ஏமாற்று வேலையா ?- தி.மு.க எம்.பி கேள்வி

அப்போது பதில் அளித்துப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் இதனை விவாதிப்பதாகவும், இன்னும் வரி விதிப்பு சதவீதம் நிர்ணயிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டார்.

மேலும் எவ்வளவு சதவீத வரிவிதிப்பிற்குள் கொண்டுவர வேண்டும் என்பதை ஜி.எஸ்.டி கவுன்சில்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

நிதியமைச்சரின் பேச்சுக்கு பிறகு பேசிய தயாநிதி மாறன், இதேபோல் BSNL விவகாரத்தில் அந்த நிறுவனத்திற்கு 4G சேவையை தரமறுக்கிறீர்கள். அதற்கு மாறாக, அந்த நிறுவனத்தில் பணியாற்றிவந்த ஊழியர்களுக்கு VRS என்ற ஒரு திட்டத்தைக் கொண்டுவந்து பணியிலிருந்து விட்டீர்கள்.

இந்த நிலையில் நாட்டின் பெருமைக்குரிய அந்த நிறுவனத்தை வேறு யாருக்காவது விற்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்? மேலும் வரி குறைப்பு நடவடிக்கையினால், கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும் பயன்பெறுகின்றன? ஏன் சாமானிய மக்கள் பயன் பெறுவதில்லை? என்று கேள்வி எழுப்பினார்.

banner

Related Stories

Related Stories