தமிழ்நாடு

‘சில்லரை பிரச்னைக்காக அரசு பஸ் கண்ணாடியை உடைத்த காவலாளி’: சென்னையில் சம்பவம்!

சென்னையில் அரசு பேருந்தில் சில்லரை இல்லையென இறக்கிவிட்ட ஆத்திரத்தில் பேருந்து கண்ணாடியை பயணி ஒருவர் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘சில்லரை பிரச்னைக்காக அரசு பஸ் கண்ணாடியை உடைத்த காவலாளி’: சென்னையில் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அரசு பேருந்தில் பயணிக்கும் பொதுமக்களுக்கும் நடத்துநருக்கும் இடையே ஏற்படும் சில்லரைப் பிரச்சனை பல ஆண்டுகளாக நீடித்து வருகின்றது. இதனால் சில நேரங்களில் பேருந்து பயணிகளுக்கும், நடத்துநருக்கும் அடிதடி சண்டையே நிகழ்ந்து வருகிறது. அதுபோல ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேந்தவர் கமலக்கண்ணன். 41 வயதான இவர், சென்னை திநகரில் உள்ள ஒரு கடையில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

இவரைப் பார்ப்பதற்கு ஊரில் இருந்து அவரது மகன் வந்துள்ளார். வந்திருந்த தனது மகனை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் வழியனுப்பி விட்டு வேலைக்கு திரும்ப அரசு மாநகர பேருந்தில் ஏறியுள்ளார்.

தியாகராயர் செல்ல டிக்கெட் கேட்டு எடுக்கும்போது தான் பார்த்துள்ளார் தன்னிடம் வெறும் 500 மட்டுமே உள்ளது என்று, பின்னர் நடத்துநரிடம் 500 ரூபாயைக் கொடுத்து டிக்கெட் கேட்டுள்ளார். 15 ரூபாய்க்கு 500 ரூபாய் கொடுத்தால் சில்லரைக்கு எங்குபோவது எனக் கூறி, அடுத்தப் பேருந்து நிறுத்தத்தில் கீழே இறக்கி விட்டுள்ளனர்.

‘சில்லரை பிரச்னைக்காக அரசு பஸ் கண்ணாடியை உடைத்த காவலாளி’: சென்னையில் சம்பவம்!

பின்னர் அடுத்த வந்த பேருந்தில் ஏறியபோதும் சில்லறை இல்லையென நடத்துநர் அண்ணா சாலையில் இறக்கிவிட்டுள்ளனர். இறுதியாக வந்த 23 சி பேருந்தில் ஏறியுள்ளார், அதிலும் சில்லரை இல்லையென கீழே இறக்கிவிட மிகுந்த மன உலைச்சலில் ஆட்டோ பிடித்து தியாகராயர் சென்றுள்ளார். அப்போது வேலைக்கு நேரமாகிவிட்ட பதற்றம், ஒவ்வொரு பேருந்திலும் சில்லரையென இறங்க சொன்னதால் கடும் விரத்தில் ஆட்டோவில் வந்துள்ளார்.

அப்போது தன்னை முதலில் இறக்கிவிட்ட பேருந்து தேனாம்பேட்டை சிக்னலில் நின்றுள்ளது. இதனைப் பார்த்த கமலக்கண்ணன் என்ன செய்கிறோம் என தெரியாமல் ஆட்டோவில் இருந்து இறங்கி பேருந்தின் முன்பக்க கண்ணாடியை கல்லால் அடித்து நொருக்கினார். இதனால் முன்பக்கம் இருந்த பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர் பயத்தில் அலறி கீழே இறங்கினர்.

பின்னர் பேருந்து முன்பக்கம் நின்றிருந்த கமலக்கண்ணனைப் பொதுமக்கள் பிடித்து போலிஸிடம் ஒப்படைத்தனர். பின்னர் கமலக்கண்ணனை பிடித்த போலிஸார் பாண்டிபஜார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடத்திய விசாரணையில் சில்லரை இல்லாததால் தன்னை கீழே இறக்கிவிட்ட ஆத்திரத்தில் இதுபோல செய்ததாக கூறியுள்ளனர்.

மேலும், பொதுசொத்துகளை சேதப்படுத்தியதாக கூறி அவர் மீது வழக்குப் பதிவு செய்தாகவும் கூறபடுகிறது. அவசரமாக பேருந்தில் ஏறும் பயணிகளிடம் சில்லரை இல்லையென நடத்துநர்கள் இதுபோல இறக்கிவிடுவது பேருந்து பணிகளுக்கு மன உலைச்சலையே ஏற்படுத்தும் எனவே மாநகர பேருந்தில் இதுபோல பிரச்சனை நீடிப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து போக்குவரத்து ஊழியர் ஒருவரிடம் கேட்கும் போது, பணிமனையில் இருந்து பேருந்தை எடுக்கும்போது, நூறு ரூபாய்க்கான சில்லரை காசுகளை மட்டுமே வழங்குவார்கள். ஆனால் தற்போது முதல் நாள் வசூல் செய்யப்படும் சில்லரையை பேருந்து நிர்வாக வெளியில் மாற்றிவிடுகின்றனர், இதனால் கையில் சில்லரை இல்லாததால் தட்டுப்பாடு ஏற்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories