தமிழ்நாடு

சரவணா ஸ்டோர்ஸ் நகைக்கடையில் மோசடியாக பணம் பறிக்க முயற்சி : அ.தி.மு.க பிரமுகர் உட்பட 9 பேர் கைது!

தியாகராயநகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் நகைக்கடையில் பணம் பறிக்க முயற்சித்த அ.தி.மு.க உறுப்பினர் உட்பட 9 பேரை போலிஸார் கைது செய்தனர்.

 சரவணா ஸ்டோர்ஸ் நகைக்கடையில் மோசடியாக பணம் பறிக்க முயற்சி : அ.தி.மு.க பிரமுகர் உட்பட 9 பேர் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் எலைட் நகைக்கடையில் போலி தங்க நகை விற்பனை செய்ததாகக் கூறி 15 லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டதும் இல்லாமல், மேலும் மிரட்டி ஒரு கோடி ரூபாய் கேட்டு தகராறு செய்த அ.தி.மு.க உறுப்பினர், போலி பத்திரிகையாளர் மற்றும் 5 வழக்கறிஞர்கள் என 9 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

திருவேற்காடு சுந்தரசோழபுரத்தைச் சேர்ந்தவர் தனசேகரன். இவர் தியாகராய நகரில் உள்ள எலைட் சரவணா தங்க நகைக்கடையில் கடந்த 3ம் தேதி, பழைய தங்க நாணயங்கள் கொடுத்து 3 சவரனுக்கு செயின் வாங்கியுள்ளார். நகையை வாங்கிக்கொண்டு சென்ற தனசேகர் அடுத்த ஒரு மணி நேரத்தில் திரும்பி அதே கடைக்கு வந்துள்ளார். அப்போது, செயினில் பூசப்பட்ட முலாம் உதிர்வதாகவும், போலி நகை விற்பனை செய்யப்பட்டுள்ளது எனவும் உரிமையாளரிடம் பேசியுள்ளார்.

ஆகையால், இதற்கு இழப்பீடு வழங்கக்கோரியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் தனசேகரன். மேலும், தான் ஊடகத்தில் பணியாற்றுவதாகவும், இழப்பீடு வழங்கவில்லை என்றால் போலி நகைகளை விற்பதாக மீடியாவை அழைத்து அம்பலப்படுத்துவேன் என தனசேகரன் கூறியதாகவும், அவ்வாறு செய்யக்கூடாது என்றால் 15 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் எனவும் மிரட்டியுள்ளார். இதையடுத்து, நகைக்கடை உரிமையாளரும் 15 லட்ச ரூபாயை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

அதன் பிறகு கடையில் இருந்து சென்ற தனசேகர், தனது நண்பர்களான அ.தி.மு.க பிரமுகர் ஜீவா, வழக்கறிஞர்கள் ஜெகதீசன், அமானுல்லா, ஸ்ரீராம், முருகன், திருமலை ஆகியோருடன் மீண்டும் சரவணா ஸ்டோர்ஸ் நகைக்கடைக்கு வந்து போலி நகை விற்கிறீர்கள் எனக் கூறி பலமுறை மிரட்டியுள்ளனர்.

இது நேற்றும் தொடர்ந்தது. அப்போது ஒரு கோடி ரூபாய் கேட்டு தனசேகர், ஜீவா மற்றும் இதர ஆட்கள் உரிமையாளரை மிரட்டியுள்ளனர். இதனையறிந்து அதிர்ச்சி அடைந்து, மாம்பலம் போலிஸாருக்கு தகவல் கொடுக்க நகைக் கடைக்கு விரைந்த தியாகராயாநகர் காவல் துணை ஆணையர் அசோக் குமார் தலைமையிலான காவல்துறையினர் தனசேகர், ஜீவா உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.

அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தனசேகர் மற்றும் கூட்டாளிகளின் மோசடிகள் அம்பலமானது. அதில், 3ம் தேதி 3 சவரன் நகை வாங்கிய தனசேகர், அதன் மீது போலி நகை என காண்பிப்பதற்காக போலி நகையில் பூசப்பட்டிருக்கும் முலாமை நீக்கும் பொடியைத் தூவி பணப் பறிப்பில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, தனசேகரிடம் இருந்த போலி காவல்துறை, பத்திரிகை அடையாள அட்டைகளையும், அ.தி.மு.க உறுப்பினர் ஜீவாவிடம் இருந்து 2 துப்பாக்கிகளையும், 2 கார்களையும் பறிமுதல் செய்தனர்.

banner

Related Stories

Related Stories