தமிழ்நாடு

“8 வழிச்சாலை 270 கி.மீ என சொல்வது பொய்” : 10 கி.மீ தூரத்தை குறைக்க 10000 கோடி செலவழிப்பதாக குற்றச்சாட்டு!

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டம் கனிம வளங்களை கொள்ளை அடிப்பதற்காக மோசடியாக கொண்டுவரப்படும் திட்டம் எனக் குற்றம்சாட்டியுள்ளது எட்டு வழிச் சாலை எதிர்ப்பு இயக்கம்.

“8 வழிச்சாலை 270 கி.மீ என சொல்வது பொய்” : 10 கி.மீ தூரத்தை குறைக்க 10000 கோடி செலவழிப்பதாக குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சேலம் - சென்னை எட்டுவழிச் சாலை அமைப்பதை எதிர்த்து சேலம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். மக்கள் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக மிரட்டல் விடுத்தும், பொய் வழக்குகளைப் போட்டும் கொடுமை செய்து வருகிறது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு.

இந்நிலையில், சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டம் கனிம வளங்களை கொள்ளை அடிப்பதற்காக மோசடியாக கொண்டுவரப்படும் திட்டம் எனக் குற்றம்சாட்டியுள்ளது எட்டு வழிச் சாலை எதிர்ப்பு இயக்கம்.

இதுகுறித்துப் பேசிய எட்டு வழிச் சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம், “சென்னை - சேலம் 330 கிலோமீட்டர். இந்தத் தொலைவு தற்போது போடும் எட்டு வழிச் சாலை மூலம் 270 கிலோமீட்டராக குறையும் என்பது பொய்யான தகவல். சென்னையிலிருந்து சேலத்திற்கு 320 கிலோமீட்டர் சாலை போடப்படும். வெறும் 10 கிலோ மீட்டர் தூரத்தைக் குறைக்க 10,000 கோடி ரூபாய் செலவழிப்பது மோசமான முன்னுதாரணம். இது மக்களுக்கான திட்டம் அல்ல. கனிமங்களை கொள்ளை அடிப்பதற்கான திட்டம்” எனத் தெரிவித்துள்ளார்.

“8 வழிச்சாலை 270 கி.மீ என சொல்வது பொய்” : 10 கி.மீ தூரத்தை குறைக்க 10000 கோடி செலவழிப்பதாக குற்றச்சாட்டு!

மேலும், “கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக சேலத்தில் முதல்வர் அரசு விழாவில் எட்டு வழிச் சாலைக்கு 20 விவசாயிகள் நிலத்தைத் தர உள்ளதாக தெரிவித்துள்ளார். அது பொய்யான தகவல். முதல்வரின் நிர்பந்தம் செய்ததால் தாங்கள் அப்படிக் கூறியதாக மூன்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விவசாயிகளை நிலத்தைத் தர அரசு நிர்ப்பந்திக்கிறது. சேலத்திலிருந்து சென்னைக்கு இரண்டு வழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக போடப்படும் என்ற சொன்ன பணியே அப்படியே நின்றுவிட்டது.

அந்தப் பணியை கைவிட்டுவிட்டு தற்போது எட்டு வழிச் சாலைத் திட்டத்தை எடுத்திருப்பது எதற்காக? எட்டு வழிச் சாலை வழியில் சுமார் 8 மலைகள் உள்ளன. அந்த மலைகளை கொள்ளையடிப்பதற்காகத்தான் இந்தத் திட்டம். எட்டு வழிச் சாலை திட்டத்தை ஒளிவுமறைவின்றி தெளிவுபடுத்த வேண்டும். இந்தத் திட்டம் குறித்து அரசு வெளிப்படையாகச் சொல்ல மறுப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories