தமிழ்நாடு

வடிவேலு பாணியில், கடை முதலாளியை திசைதிருப்பி பணத்தைத் திருடிய மர்ம நபர்... அடையாறில் அதிர்ச்சி சம்பவம்!

உரிமையாளரை திசைதிருப்பி, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்த சிசிடிவி காட்சி.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சென்னையில் கடை உரிமையாளரின் கவனத்தை திசைதிருப்பி பணத்தைத் திருடும் மர்ம நபர் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

சென்னை அடையாறு பகுதியில் கமலக்கண்ணன் என்பவர் பை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். அந்தக் கடைக்குச் சென்ற மர்ம நபர் ஒருவர் பள்ளி மாணவர்களுக்கு நிறைய பை வாங்க வேண்டும் என்று கூறி, சில மணி நேரம் உரிமையாளரிடம் விசாரித்து, சுமார் எட்டாயிரம் ரூபாய் மதிப்பிலான பைகளை தேர்வு செய்து வைத்துள்ளார்.

பின்பு பைகளை எடுத்துச் செல்ல மற்றொருவரை அழைத்து வருவதாகக் கூறிச் சென்ற அந்த மர்ம நகர் வெகுநேரமாகியும் திரும்பாததால் சந்தேகமடைந்த கடை உரிமையாளர் கமலக்கண்ணன் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துள்ளார்.

அப்போதுதான் அந்த மர்ம நபர் கவனத்தை திசைதிருப்பி கடையில் இருந்த பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் கமலக்கண்ணன். பின்னர், அந்த மர்ம நபர், அதே பகுதியில் உள்ள மற்றொரு கடையிலும் இதே பாணியில் கைவரிசை காட்டி கொள்ளை அடித்தது தெரியவந்துள்ளது.

ஒரு சினிமா படத்தில் நடிகர் வடிவேலு இதுபோல, கடை முதலாளியிடம் அரிசி வாங்குவது போல பேச்சுக்கொடுத்து, அவர் அசந்த நேரத்தில் கடையில் உள்ள பொருட்களைத் திருடுவார். அதே பாணியில் நிகழ்ந்த இந்த தொடர் திருட்டு சம்பவங்கள் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories