தமிழ்நாடு

’ரயில் நிலையங்களில் உள்ள விளம்பர பலகைகளை நீக்குங்கள்’ : அதிரடி உத்தரவிட்ட நீதிபதிகள்

ரயில் நிலையங்களில், ரயில்களில் விளம்பர பலகைகளை ஒட்டுவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

’ரயில் நிலையங்களில் உள்ள விளம்பர பலகைகளை நீக்குங்கள்’ : அதிரடி உத்தரவிட்ட நீதிபதிகள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ரயில்களில் சுவரொட்டி ஒட்டுவது, விளம்பர பலகைகளை வைப்பது போன்ற செயல்கள் மக்களுக்கும் பெரும் இடையூறாக உள்ளது. எனவே ரயில் நிலையங்களை சுத்தமாக வைத்திருக்கும் வகையில் நோட்டீஸ் ஒட்டதோ, விளம்பரம் செய்யவோ கூடாது என உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக்கூறி மதுரை உயர் நீதிமன்றத்தில் பிரபாகரன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம் தாரணி அமர்வு, இனி தெற்கு ரயில்வேக்குச் சொந்தமான எந்த இடங்களிலும் ப்ளக்ஸ் பேனரோ, சுவரொட்டிகளோ ஒட்டுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது.

’ரயில் நிலையங்களில் உள்ள விளம்பர பலகைகளை நீக்குங்கள்’ : அதிரடி உத்தரவிட்ட நீதிபதிகள்

அவ்வாறு வழங்கினால் நோட்டீஸ் பேனர் வைத்தவர்கள் மற்றும் அதற்கு சொந்தமானவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

மேலும், தெற்கு ரயில்வேக்குச் சொந்தமான இடங்களில், ரயில்களில் ஏற்கெனவே உள்ள விளம்பர பலகைகள், நோட்டீஸ்கள் உள்ளிட்ட அனைத்தையும் மூன்று வாரத்திற்குள் அகற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories