தமிழ்நாடு

’கொடைக்கானலுக்கு இப்போது செல்ல வேண்டாம்’ - சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை !

கொடைக்கானலில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் இன்றும் நாளையும் வர வேண்டாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

’கொடைக்கானலுக்கு இப்போது செல்ல வேண்டாம்’ - சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. அதிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மலை தொடர்ந்து பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.

நேற்று இரவு பெய்த கனமழையினால் மலை சாலையில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. முறிந்து விழுந்த மரங்கள் அகற்றப்பட்ட பின்னரே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டடன.

’கொடைக்கானலுக்கு இப்போது செல்ல வேண்டாம்’ - சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை !

தொடர் கனமழையால் கொடைக்கானலில் உள்ள கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பார்க், ரோஜா பூங்கா, பசுமை பள்ளத்தாக்கு, குணா குகை, மோயர் பாயிண்ட் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன.

மலைச்சாலையில் தொடர்ந்து மரங்கள் முறிந்து விழுவதால் சுற்றுலா பயணிகள் மலைச்சாலையில் கவனமாக வருமாறு வனத்துறை தெரிவித்துள்ளது. மேலும் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளதால் கொடைக்கானல் வருவதை தவிர்க்குமாறும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

அரபிக் கடலில் கியார், மஹா என்ற இரு புயல்கள் உருவாகி இருப்பதால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories