தமிழ்நாடு

”நானும் ஒரு தகப்பன் தான்; எழுந்து வா தங்கமே” - சுர்ஜித்துக்காக உருகும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்!

”நானும் ஒரு தகப்பன் தான்; எழுந்து வா தங்கமே” - சுர்ஜித்துக்காக உருகும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் இரண்டரை வயது சிறுவன் சுர்ஜித், ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து 36 மணி நேரம் கடந்துவிட்டது. பல்வேறு தொழில்நுட்ப உக்திகளை பயன்படுத்தி குழந்தையை மீட்கும் பணியில் அரசு இயந்திரங்களும் தன்னார்வலர்கள் குழுக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

குழந்தையை மீட்கும் இறுதி முயற்சியாக, ஆழ்துளைக் கிணற்றின் பக்கவாட்டில் சுரங்கம் தோண்டி, மீட்பு படை வீரர்களை அனுப்பி குழந்தையை வெளியே எடுத்து வரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் சுஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என உருகி வருகின்றனர். அந்த வரிசையில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

அதில் “ நானும் ஒரு குழந்தையோட தகப்பன் தான். அந்த வகையில என்னால சுர்ஜித் பெற்றோரின் வலியை உணர முடியுது. அந்த குழந்த உயிர் பொழச்சு வரணும். உன் தாய்ப்பால்ல வீரம் இருக்கு கண்ணு. நிச்சயம் வருவ நீ தம்பி. நீ வந்தாதான் எல்லாருக்கும் உண்மையான தீபாவளி. எழுந்து வா தங்கமே. ” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories