தமிழ்நாடு

பேனர் வைக்கும் செலவில் அரசு மருத்துவமனைக்கு உபகரணம் வாங்கிக் கொடுத்த விஜய் ரசிகர்கள்!

‘பிகில்’ படத்திற்கு பேனர் வைக்கும் செலவில் அரசு மருத்துவமனைக்கு ஒரு ஸ்ட்ரெச்சர் மற்றும் இரத்த அழுத்த பரிசோதனைக் கருவிகளை விஜய் ரசிகர்கள் வழங்கியுள்ளனர்.

பேனர் வைக்கும் செலவில் அரசு மருத்துவமனைக்கு உபகரணம் வாங்கிக் கொடுத்த விஜய் ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

விஜய் நடிப்பில் அவரது 63-வது படமாக உருவாகி திரையில் வெளிவந்துள்ள படம் தான் 'பிகில்'. அட்லீயுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள விஜய் இந்தப் படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடித்துள்ளார்.

நயன்தாரா, இந்துஜா, கதிர், விவேக், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, ஆனந்த் ராஜ் எனப் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு வெளியாகியுள்ள பிகில் படத்திற்கு காலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடைத்தது. இதனையடுத்து விஜய் ரசிகர்கள் காலை 4 மணி முதல் திரையரங்குகளில் குவிந்துவருகின்றனர்.

முன்னதாக பிகில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், தனது படத்திற்கு பேனர் வைக்ககூடாது என அறிவுறுத்தினர். அதன்பேரில் விஜய் ரசிகர்கள் பல்வேறு நலதிட்ட உதவிகளையும், சமூகவலைதளங்களில் மக்கள் பிரச்சனையும் பேசி நடிகர் விஜய்யின் சொல்லை காப்பாற்றி வருகின்றனர்.

பேனர் வைக்கும் செலவில் அரசு மருத்துவமனைக்கு உபகரணம் வாங்கிக் கொடுத்த விஜய் ரசிகர்கள்!

இந்நிலையில், படம் இன்று வெளியாகியிருக்கும் நிலையில், பேனர் வைக்கும் செலவில் நெல்லையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஒரு ஸ்ட்ரெச்சர் மற்றும் இரண்டு இரத்த அழுத்த பரிசோதனைக் கருவிகளை வழங்கியுள்ளனர். தென்காசியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் மற்றும் மருத்துவமனையின் ஊழியர்கள் மருத்துவர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு, நெல்லையில் உள்ள மீனாட்சிபுரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 4 இடங்களில் 12 சிசிடிவி கேமராக்கள் மற்றும் மானிட்டர்கள் போன்றவற்றை வழங்கினார்கள்.

இதேப்போல தமிழகத்தில் பல இடங்களில் பல்வேறு உதவிகள் செய்துவரும் விஜய் ரசிகர்களுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories