தமிழ்நாடு

இன்று மாலையுடன் ஓய்கிறது இடைத்தேர்தல் பரப்புரை: வாக்காளர் அல்லாதோர் வெளியேற தேர்தல் அதிகாரி உத்தரவு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இன்று மாலையுடன் ஓய்கிறது பரப்புரை.

இன்று மாலையுடன் ஓய்கிறது இடைத்தேர்தல் பரப்புரை: வாக்காளர் அல்லாதோர் வெளியேற தேர்தல் அதிகாரி உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரியில் காமராஜர் நகர் ஆகிய காலியாக உள்ளத் சட்டமன்றத் தொகுதிகளுக்கு வருகிற அக்.,21ன் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

திமுக சார்பில் விக்கிரவாண்டியில் நா.புகழேந்தியும், நாங்குநேரியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரனும் வேட்பாளராக களத்தில் உள்ளனர். அதேபோல் புதுச்சேரி காமராஜர் நகரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் போட்டியிடுகிறார்.

இன்று மாலையுடன் ஓய்கிறது இடைத்தேர்தல் பரப்புரை: வாக்காளர் அல்லாதோர் வெளியேற தேர்தல் அதிகாரி உத்தரவு!

இந்த மூன்றுத் தொகுதிகளிலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதேபோல் திமுக முன்னோடிகளும், கூட்டணி கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இடைத்தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு இன்று மாலை 6 மணிக்குள் நிறைவடைகிறது என தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ அறிவித்துள்ளார். இதையடுத்து, இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இருந்து வெளியூரைச் சேர்ந்த வாக்காளர்கள் அல்லாத நபர்கள் வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories