தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : சி.பி.ஐ. விசாரணையை கண்காணிப்போம் - சென்னை உயர்நீதிமன்றம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : சி.பி.ஐ. விசாரணையை கண்காணிப்போம் - சென்னை உயர்நீதிமன்றம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஸ், உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி சி.பி.ஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து டெல்லி மற்றும் சென்னையில் இருந்து வந்த சி.பி.ஐ அதிகாரிகள் பொள்ளாச்சியில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சி.பி.ஐ-யின் இந்த புலன் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் மேற்பார்வையிட வேண்டும் என்ற தமிழ்நாடு பெண்கள் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் கே.சாந்தகுமாரி பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : சி.பி.ஐ. விசாரணையை கண்காணிப்போம் - சென்னை உயர்நீதிமன்றம்

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி வினீத்கோத்தாரி, நீதிபதி சி.சரவணன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பு புலன் விசாரணை நடுநிலையுடன் நடந்து வருவதாகவும். கைது செய்யப்பட்ட 5 பேருக்கு எதிராக இடைக்கால குற்றப்பத்திரிகையை கோவை தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. கடந்த மே 23ம் தேதி தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இதுகுறித்து விரிவான அறிக்கையை சி.பி.ஐ. தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். சி.பி.ஐ புலன் விசாரணையை உயர்நீதிமன்றம் மேற்பார்வையிடும் என்றும் தெரிவித்த நீதிபதிகள் வருகிற நவம்பர் 4ம் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்தனர்.

banner

Related Stories

Related Stories