தமிழ்நாடு

கீழடி அகழாய்வு குழிகளை மூட வேண்டாம் : பொதுமக்கள் கோரிக்கை!

கீழடியில் அகழாய்வு பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளை மூடும் பணி இன்று தொடங்குகிறது.

கீழடி அகழாய்வு குழிகளை மூட வேண்டாம் : பொதுமக்கள் கோரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே கீழடியில் தொல்லியல் துறையினர் அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வந்தனர். இதுவரை 5 கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்துள்ளன.

கீழடி அகழாய்வு குழிகளை மூட வேண்டாம் : பொதுமக்கள் கோரிக்கை!

இதில் தமிழர் நாகரிகத்தை வெளிப்படுத்தும் விதமாக 700க்கும் மேற்பட்ட அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் 5ம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்தததை அடுத்து தோண்டப்பட்ட குழிகளை மூட தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.

கீழடி அகழாய்வு குழிகளை மூட வேண்டாம் : பொதுமக்கள் கோரிக்கை!

அதன்படி, இன்று மாலை முதல் அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் மூடப்படுகின்றன. இதற்கிடையில், அடுத்தகட்ட அகழாய்வு பணி நடைபெறும் வரை குழிகளை மூடாமல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

banner

Related Stories

Related Stories