தமிழ்நாடு

“மனித உரிமைகளை மிதித்து 428 பேர் மீது பொய் வழக்கு ” : தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அதிர்ச்சி அறிக்கை!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ இயக்குநர் தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனின் ஆய்வு அறிக்கையும் வெளியாகியுள்ளது.

“மனித உரிமைகளை மிதித்து 428 பேர் மீது பொய் வழக்கு ” : தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அதிர்ச்சி அறிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 100 நாள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் 100-வது நாள் போராட்டத்தின் போது தூத்துக்குடி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தமிழக காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் பலர் படுகாயம் அடைந்தனர்.

மேலும், இது தொடர்பாக வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. மேலும் விசாரணை குறித்த அறிக்கையை கடந்த மாதம் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விவரங்களை வரும் செப்டம்பர் 16-ம் தேதிக்குள் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சிபிஐ தெரிவித்திருந்தது.

அதனடிப்படையில், தற்போது சிபிஐ அதன் நிலை அறிக்கையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்துள்ளது. அதில், சம்பவத்தை அடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணை குறித்தும், காவல்துறையினரால் மக்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிக் குறித்தும் சிபிஐ தரப்பில் சீலிட்ட கவரில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

“மனித உரிமைகளை மிதித்து 428 பேர் மீது பொய் வழக்கு ” : தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அதிர்ச்சி அறிக்கை!

இந்த அறிக்கையின் மீதான விவாவதம் அடுத்தவாரம் நடைபெறும் என நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார். மேலும், அந்த வழக்கின் போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வழக்கவேண்டும் என சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிஐக்கு மாற்றி 4 மாதத்தில் விசாரணையை முடிக்க கடந்த 2018ம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனாலும் வழக்கு இன்னும் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி, தூத்துக்குடி தூப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் இடைக்கால அறிக்கை சமர்பிக்காத நிலையில், அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சில முக்கிய அம்சங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது.

அதில், துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளைஞர்களை குறிப்பாக 18 முதல் 30 வயதைச் சேர்ந்தவர்களை காவல்துறையினர் எந்த ஆதாரமின்றியும், கடுமையான தாக்குதல்களை நடத்தியும் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகின.

“மனித உரிமைகளை மிதித்து 428 பேர் மீது பொய் வழக்கு ” : தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அதிர்ச்சி அறிக்கை!
ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன்

மேலும், இளைஞர்களின் கைது நடவடிக்கையின் போது காவல்துறை சட்ட நடைமுறைகளை துளியும் மதிக்காமல் செய்பட்டதாகவே தெரிகிறது. மேலும் கைதின் போது கொடூரமாகத் தாக்கப்பட்ட இளைஞர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காமல் தாமதப்படுத்தி வந்துள்ளதாக அருணா ஜெகதீசன் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, தனி மனித உரிமைகளை சிதைத்து, தகாத முறையில் காவல்துறையினர் நடந்துக்கொண்டதாகவும், எந்த தவறும் செய்யாத 428 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது. அவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெறவேண்டும் என விசாரணை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

அதேபோல், காவல்துறையினரால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு தலா 6 கோடியே 50 லட்சம் வழங்க வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார் என்பன போன்ற முக்கியமான கேள்விகள் முன்வைத்து தனது அறிக்கையை நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சமர்பிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையில் இந்த குற்றச்சாட்டுகள் இடம் பெறுமா என்றக் கேள்வி எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories