தமிழ்நாடு

“பா.ஜ.க-விற்கு அனுமதி கிடையாது” : மத்திய அமைச்சர் சுப்ரியோவுக்கு ஜாதவ்பூர் பல்கலை. மாணவர்கள் எதிர்ப்பு!

மேற்கு வங்கத்தில் ஜாதவ்பூர் பல்கலைக் கழக நிகழ்ச்சிக்குச் சென்ற மத்திய இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோவிற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

“பா.ஜ.க-விற்கு அனுமதி கிடையாது” : மத்திய அமைச்சர் சுப்ரியோவுக்கு ஜாதவ்பூர் பல்கலை. மாணவர்கள் எதிர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்தி பரிஷத் சார்பில் இந்துத்துவா குறித்த கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோல கருத்தரங்கத்தை கல்லூரியில் நடத்தக்கூடாது என முன்பே மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளனர்.

இந்நிலையில், பல்கலைக் கழக நிர்வாகம்த்தின் அனுமதி வழங்கியதன் அடிப்படையில், நேற்று கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ சென்றிருந்தார்.

அவர் வருவதை அறிந்த மாணவர்கள் பல்கலைக் கழகத்தின் நுழைவு வாயிலில் நின்று அவரை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர். பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாணவர் கூட்டமைப்பு மற்றும் கலாச்சார பிரிவு மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் சுப்ரியோவுக்கு கருப்புக்கொடி காட்டினர்கள்.

மேலும் 'go back Supriyo', “பா.ஜ.க-விற்கு அனுமதி கிடையாது” என்றும் முழக்கமிட்டனர். இதனால், ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக பல்கலைக்கழகத்தின் நுழைவு வாயிலிலேயே அமைச்சர் காத்திருந்தார். போலிஸார் வந்து மாணவர்களை தடுத்து, அமைச்சருக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.

பின்னர், நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு வெளியே வந்த பிறகு அவருடைய காரை மாணவர்கள் வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் நேரடியாக பல்கலைக்கழகத்துக்கு சென்று அமைச்சரை அங்கிருந்து மீட்டு அவரது காரில் அழைத்துச் சென்றார். மேலும் அமைச்சரை முற்றுகையிட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி அவர் உத்தரவிட்டார் எனத் தெரிகிறது.

இதுகுறித்து மாணவர் கூட்டமைப்பின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், “கல்லூரியில் எல்லா மதத்தினரும் படிக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட மதம் மட்டுமே சிறந்தது என கொண்டாடும் மாணவர்களின் நிகழ்ச்சிக்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி கொடுத்ததே தவறு என முன்பே சுட்டிக்காட்டினோம்.

அதுமட்டுமல்லாமல் அந்த மாணவர்களின் அமைப்பு கல்லூரி வளாகத்திற்குள் ஒற்றுமையாக இருக்கும் மாணவர்கள் மத்தியில் பிளாவை ஏற்படுத்தும் முயற்சிகிறது. இந்நிலையில், அதன் நிகழ்ச்சிக்கு பா.ஜ.க சார்பில் ஒருவர் வந்தால் நுழைய அனுமதிக்கமட்டோம். எதிர்ப்பு தெரிவிப்போம்.

திறமையான பேராசிரியர்கள் இருக்கும் போது பா.ஜ.க அமைச்சர் எதற்கு? அவர் கருத்தரங்கில் கலந்துக்கொண்டு என்ன பேசுவார் என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன. வளாகத்திற்குள் மாணவர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கவிடமாட்டோம்” என அவர் தெரிவித்துள்ளார். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

banner

Related Stories

Related Stories