தமிழ்நாடு

செல்ஃபி எடுப்பது போல பேச்சுக்கொடுத்து, தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் பணத்தை அபேஸ் செய்த வெளிநாட்டினர்!

செல்ஃபி எடுப்பது போல் திசைத்திருப்பி கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை கொள்ளையடித்த வெளிநாட்டினர் இருவருக்கு போலிஸார் வலைவீச்சு.

செல்ஃபி எடுப்பது போல பேச்சுக்கொடுத்து, தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் பணத்தை அபேஸ் செய்த வெளிநாட்டினர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவாரூர், சிவகங்கை, திருச்சி போன்ற பகுதிகளில் உள்ள சில்லறை வணிகக் கடைகளுக்கு சென்று செல்ஃபி எடுப்பது போல பாசாங்கு காட்டி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட வெள்ளைக்காரர்களை பிடிக்க போலிஸார் வியூகம் வகுத்துள்ளனர்.

செல்ஃபி எடுப்பது போல பேச்சுக்கொடுத்து, தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் பணத்தை அபேஸ் செய்த வெளிநாட்டினர்!

திருவாரூர் முத்துப்பேட்டையில் உள்ள மளிகைக் கடைக்குச் சென்ற வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணும் ஆணும், அங்குள்ள பணியாளர்களுடன் செல்ஃபி எடுத்துள்ளனர்.

அந்த சமயத்தில் அந்தப் பெண்ணுடன் வந்த நபர் கல்லாப்பெட்டியில் உள்ள கடையின் உரிமையாளரிடம் சென்று தன்னிடம் உள்ள வெளிநாட்டு பணத்தை மாற்றவேண்டும் எனக் கூறி CL சீரியல் எண் கொண்ட 500, 2000 ரூபாய் நோட்டாக கொடுக்கும்படி கேட்டுள்ளார்.

செல்ஃபி எடுப்பது போல பேச்சுக்கொடுத்து, தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் பணத்தை அபேஸ் செய்த வெளிநாட்டினர்!

அதன் பின், ரூபாய் நோட்டுக்கட்டில் உள்ள சீரியல் எண்ணை சோதிப்பது போல் நடித்து சில ரூபாய் நோட்டுகளை அந்த நபர் உருவியுள்ளார். பணியாளர்களுடன் அந்த வெள்ளைக்கார பெண்மணி பேச்சுக்கொடுத்து, செல்பி எடுத்துக்கொண்டிருந்ததால் இந்த நிகழ்வு அங்குள்ள எவர் கண்ணிலும் தென்படவில்லை.

வெளிநாட்டவர்கள் இருவரும் சென்ற பின்னர், பணம் கொள்ளைபோனதை அறிந்த கடையின் உரிமையாளர் போலிஸில் புகார் கொடுத்துள்ளார்.

செல்ஃபி எடுப்பது போல பேச்சுக்கொடுத்து, தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் பணத்தை அபேஸ் செய்த வெளிநாட்டினர்!

இதனிடையே, அவ்விருவரும் வேறு ஊருக்குத் தப்பிச் சென்றுள்ளனர். தப்பியவர்கள், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலையில் உள்ள மளிகைக் கடையிலும் அதே டெக்னிக்கை பயன்படுத்தி பணத்தை அபேஸ் செய்துள்ளனர்.

அதன் பிறகு திருச்சி மணப்பாறைக்குச் சென்ற இருவரும் இரும்புக்கடை உரிமையாளரிடம் சில்லறை ரூபாயைக் கொடுத்து நோட்டாக மாற்ற முயற்சித்து, 17 ஆயிரம் ரூபாயை எடுத்துச் சென்று காரில் ஏறி தப்பியுள்ளனர்.

செல்ஃபி எடுப்பது போல பேச்சுக்கொடுத்து, தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் பணத்தை அபேஸ் செய்த வெளிநாட்டினர்!

இதனையடுத்து, போலிஸிடம் புகார் அளிக்கப்பட்டது. வெவ்வேறு பகுதிகளில் ஒரே மாதிரி கொள்ளையில் ஈடுபட்டுள்ளதை அறிந்த காவல்துறையினர், மளிகைக் கடைகளில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமிராவில் வெளிநாட்டவர்களின் செய்கைகள் பதிவாகியிருந்ததை கண்டறிந்தனர். சிசிடிவி இருப்பதை அறிந்திருந்தும் தொடர்ந்து அவர்கள் இருவரும் மோசடி வேலைகளில் ஈடுபட்டுள்ளது போலிஸாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செல்ஃபி எடுப்பது போல பேச்சுக்கொடுத்து, தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் பணத்தை அபேஸ் செய்த வெளிநாட்டினர்!

கொள்ளையர்கள் இருவரின் புகைப்படத்தையும் அனைத்து கடைகளிலும் கொடுத்து, இவ்விருவரும் வந்தால் பிடித்து வைத்து போலிஸுக்கு தகவல் கொடுக்கும்படி காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதேபோன்று வேறு எவரேனும் வந்தாலும் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் கூறியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories