தமிழ்நாடு

வழக்கம்போல நீதிமன்றத்தை மதிக்காத ஹெச்.ராஜா - பா.ஜ.க-வினரால் சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள்!

பேனர் விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் ஹெச்.ராஜா பங்கேற்ற கூட்டத்திற்காக, பா.ஜ.கவினர் அனுமதியின்றி வழிநெடுகிலும் பேனர்களை வைத்துள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் கடந்த செப்டம்பர் 12 அன்று அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் மகனின் திருமணத்துக்காக சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்த விபத்தில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பேனர் விழுந்ததால் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்திய நாராயணன், ஷேசாயி அமர்வு தாமாக முன்வந்து விசாரணையை கையில் எடுத்தது. விசாரணையில் அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களை கடுமையாகச் சாடியது.

இந்தச் சம்பவத்திற்கு தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், அரசியல் கட்சி தலைவர்களும், முன்னணி நடிகர்கள் பலரும், பேனர் வைக்கக்கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பா.ஜ.க சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பங்கேற்றார். இதையொட்டி ஹெச்.ராஜாவை வரவேற்கும் விதமாக வழிநெடுக மிகப்பெரிய பேனர்களை வைத்துள்ளனர்.

வழக்கம்போல நீதிமன்றத்தை மதிக்காத ஹெச்.ராஜா - பா.ஜ.க-வினரால் சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள்!

மேலும் சாலையை ஒட்டி பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்தோடு அந்த வழியாகப் பயணித்துள்ளனர். போலிஸாரும் இந்த பேனர்கள் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மக்கள் அதிருப்தி அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து வாகன ஓட்டி ஒருவர் கூறுகையில், “சட்டவிரோத பேனரால் இளம்பெண் உயிரிழந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. பல அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் பேனர் வேண்டாம் என வலியுறுத்தி வருகின்றனர். ஏன் நீதிமன்றம் கூட கடுமையாக சாடியுள்ளது.

ஆனால் பா.ஜ.க-வினர் இந்த பேனர்கள் வைப்பதைக் கைவிடவில்லை. இந்த விவகாரத்தில் வழக்கம்போல பா.ஜ.க-வும் ஹெச்.ராஜாவும் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்கவில்லை என்றே தெரிகிறது” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories