தமிழ்நாடு

பால் விலை உயர்வைத் தொடர்ந்து அதிகரிக்கும் ஆவின் பால் பொருட்களின் விலை : 18ம் தேதி முதல் அமல்!

ஆவின் பாலின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்த்தப்பட்டதையடுத்து நெய், பால்கோவா போன்ற பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

பால் விலை உயர்வைத் தொடர்ந்து அதிகரிக்கும் ஆவின் பால் பொருட்களின் விலை : 18ம் தேதி முதல் அமல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தமிழகத்தில் பசும்பால் கொள்முதல் விலையில் லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தியும், எருமைப் பால் கொள்முதல் விலையில் 6 ரூபாய் உயர்த்தியும் தமிழக அரசு அறிவித்தது.

கொள்முதல் விலை உயர்த்தப்பட்ட காரணத்தால் ஆவின் பால் பாக்கெட்டுகளின் விலையும் அதிகரிக்கப்பட்டது. விலை உயர்வு கடந்த மாதம் 19ம் தேதி தமிழகத்தில் நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில், ஆவின் பால் பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆவின் பால் பவுடர் கிலோவுக்கு ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.320 ஆகவும், பால்கோவா கிலோ ரூ.20 உயர்த்தப்பட்டு ரூ.520 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.460 லிருந்து ரூ.495 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தின் பன்னீர் ஒரு கிலோ ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.450 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெண்ணெய் அரை கிலோ ரூ 230-ல் இருந்து ரூ.240 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த பொருட்களின் விலை உயர்வு புதன்கிழமை முதல் அமலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories