தமிழ்நாடு

விடுதி உரிமையரிடம் ஆபாசப் பேச்சு : அ.தி.மு.க முன்னாள் எம்.பி. சத்யபாமாவின் கணவர் மீது வழக்குப்பதிவு!

விடுதி உரிமையாளரிடம் ஆபாசமாக பேசிய அ.தி.மு.க முன்னாள் எம்.பி. சத்யபாமாவின் கணவர் வாசு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விடுதி உரிமையரிடம் ஆபாசப் பேச்சு : அ.தி.மு.க முன்னாள் எம்.பி. சத்யபாமாவின் கணவர் மீது வழக்குப்பதிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நிர்மலா. இவர் கோபிசெட்டிபாளையத்தில் தாங்கும் விடுதி ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன் இவர் வீட்டில் இருந்தபோது செல்போனில் திருப்பூர் முன்னாள் எம்.பி. சத்தியபாமாவின் கணவர் வாசு அழைத்துள்ளார். இருவருக்கும் நடந்த உரையாடலின்போது, தான் உல்லாசமாக இருக்க பெண் வேண்டும் என வாசு மிரட்டி உள்ளார். இது சம்பந்தமாக இருவர் பேசிய ஆடியோவும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து நிர்மலா கோபிசெட்டிபாளையம் போலிஸில் புகார் அளித்துள்ளார். வாசு மீதான புகாரை வாங்க மறுப்பதாகவும், போலிஸார் தன்னை தரக்குறைவாக பேசுவதாகவும் நிர்மலா குற்றஞ்சாட்டி இருந்தார். போலிஸ் ஸ்டேஷன் வாசலில், இதனை கண்டித்து பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க போவதாகவும் லாட்ஜ் ஓனர் நிர்மலா எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இந்நிலையில், அ.தி.மு.க முன்னாள் எம்.பி. சத்யபாமாவின் கணவர் வாசு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் நிர்மலாவிடம் விசாரணை நடத்தினார்.

முன்னாள் அ.தி.மு.க எம்.பி. சத்யபாமாவும், வாசுவும் கருத்து வேறுபாட்டினால் பிரிந்து வாழ்வது குய்ப்ப்பிடத்தக்கது. முன்னதாக சத்தியபாமாவை கொலை செய்ய முயன்ற வழக்கில் வாசு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories