தமிழ்நாடு

நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக சுங்கச் சாவடிகள் - டோல்கேட் என்ற பெயரில் வழிப்பறி!

நாட்டில் உள்ள பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தான் சுங்கச்சாவடிகள் அதிக எண்ணிக்கையில் இருப்பது தெரியவந்துள்ளது.

Bala Vengatesh
Updated on

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளிடம் இருந்து சுங்கக்கட்டணம் வசூலிக்க சுங்கச்சாவடி முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த சுங்கச் சாவடி முறையில், ஒப்பந்த காலம் தாண்டியும் சுங்கக் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக, மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் தான் சுங்கச்சாவடிகள் அதிக எண்ணிக்கையில் இருப்பது தெரியவந்துள்ளது.

கேரளாவில் 1782 கி.மீ தூரம் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வெறும் மூன்றே மூன்று சுங்கச்சாவடிகள் மட்டுமே உள்ளன. 15,437 கி.மீ தூரம் தேசிய நெடுஞ்சாலை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் 44 சுங்கச்சாவடிகள் உள்ளன. ஆனால், 5,381 கி.மீ தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை உள்ள தமிழகத்தில் 52 சுங்கச்சாவடிகள் உள்ளன.

கேரளவுடன் ஒப்பிட்டால் தமிழகத்தில் 9 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும், மகாராஷ்டிராவுடன் ஒப்பிட்டால் 15 சுங்கச்சாவடிகள் தான் இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் 52 சுங்கச்சாவடிகள் அமைத்து சுங்கக்கட்டணம் வசூலிப்பது வழிப்பறிக் கொள்ளைக்கு இணையானது என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.

banner

Related Stories

Related Stories