தமிழ்நாடு

அனுமதியின்றி அச்சடித்தால் அச்சக உரிமம் பறிக்கப்படும்: பேனர் வைக்க சென்னை மாநகராட்சி கடும் கட்டுப்பாடு!

உரிய அனுமதியில்லாமல் டிஜிட்டல் பேனர்களை அச்சடித்தால் அச்சகம் உரிமம் பறிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

அனுமதியின்றி அச்சடித்தால் அச்சக உரிமம் பறிக்கப்படும்: பேனர் வைக்க  சென்னை மாநகராட்சி கடும் கட்டுப்பாடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை மாநகரப் பகுதிகளில் அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர கமிஷ்னர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை மாநகராட்சி எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் விளம்பர பதாகைகள் மற்றும் பேனர்கள் ஆகியவை மாநகராட்சி ஆணையரின் அனுமதி பெற்ற பின்னரே அமைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

விளம்பர பதாகைகள் அச்சிடும் போது, அதன் கீழ் அனுமதி எண், அனுமதி வழங்கப்பட்ட நாள், அனுமதி அளிக்கப்பட்ட அளவின் விவரம், கால அவகாசம் ஆகியவை இடம்பெற்றிருக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதியின்றி அச்சடித்தால் அச்சக உரிமம் பறிக்கப்படும்: பேனர் வைக்க  சென்னை மாநகராட்சி கடும் கட்டுப்பாடு!

மாநகராட்சி தொழில் உரிம விதிகளுக்கு மாறாக, உரிமம் இன்றி பதாகைகள் அமைப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவ்வாறு அனுமதி, உரிமம் இல்லாமல் பேனர்களை அச்சடித்தால் அச்சகத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை அனைத்து அச்சகங்களும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது

banner

Related Stories

Related Stories