தமிழ்நாடு

மதுரையில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூட்டால் பரபரப்பு: 5 ரவுடிகள் கைது!

மதுரை வைகை தென் கரை பகுதியில் வானத்தை நோக்கி காவல்துறையினர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

மதுரையில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூட்டால் பரபரப்பு: 5 ரவுடிகள் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதுரை மாவட்டம் வைகை தென்கரை பகுதியில், தெப்பக்குளம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சிவராம கிருஷ்ணன், காவலர் அன்பு ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த சமயத்தில் ஆட்டோவில் வந்த 5 ரவுடிகள் குடி போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனைக் கண்டு எச்சரிக்கை விடுத்த உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் மீது ரவுடிகள் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, வானத்தை நோக்கி சிவராம க்ருஷ்ணன் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலிஸார் ராஜீவ் கணேஷ் உள்ளிட்ட 5 ரவுடிகளை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

banner

Related Stories

Related Stories