சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மலில் ஜெயசீலன் என்பவர் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தாருடன் வேளாங்கண்ணிக்கு சென்றுவிட்டு இன்று காலை வீடு திரும்பியுள்ளர்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயசீலன், உள்ளே சென்று பார்த்ததும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 100 சவரன் நகைகள் மற்றும் 30 லட்சம் ரூபாய் ரொக்கமும் கொள்ளை போனது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து போலிஸுக்கு தகவல் கொடுத்ததும் சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்களுடன் வந்த காவல் துறையினர், கொள்ளையர்கள் விட்டுச் சென்ற தடயங்களை சேகரித்தனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலிஸார், மர்ம நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபோன்று சென்னையில் கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச்செயல்கள் நாள்தோறும் நடைபெறுவதால் மக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லவும் பயப்படுகின்றனர். மேலும், கொள்ளைச் சம்பவங்களை தடுக்குமாறு காவல்துறையிடம் அவ்வப்போது வேண்டுகோளும் விடுத்து வருகின்றனர்.








