தமிழ்நாடு

டோல்கேட் கட்டணம் கட்ட மறுத்து துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது : மதுரை கப்பலூரில் பரபரப்பு

மதுரை அருகே கப்பலூரில் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கியால் சுட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

டோல்கேட் கட்டணம் கட்ட மறுத்து துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது : மதுரை கப்பலூரில் பரபரப்பு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மதுரை அருகே கப்பலூரில் சுங்கச்சாவடி ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில், 6 நபர்கள் இன்று மகிந்த்ரா சைலோ காரில் வந்துள்ளனர். அவர்களிடம் சுங்கக்கட்டணம் கேட்டதற்கு கட்டணம் செலுத்த மறுப்புத் தெரிவித்து உள்ளனர். இதில் ஊழியர்களுக்கும், காரில் வந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனையடுத்து காரில் இருந்த இளைஞர் ஊழியர்களை மிரட்டும் விதமாகத் துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டுள்ளார். அவரை அங்கிருந்த ஊழியர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

அவரிடம் திருமங்கலம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நபர் திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தை சேர்ந்த சிவக்குமார் என்று தெரியவந்துள்ளது.

வழக்கு ஒன்றிற்காக நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர் ஆகிவிட்டு திரும்பி வரும் வழியில் இந்த சம்பவம் நடந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், தப்பியோடிய 4 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அவர்கள் தப்பிச் செல்ல பயன்படுத்திய காரை உசிலம்பட்டி அருகே சுற்றி வளைத்தது காவல் துறை. காரை அங்கு நிறுத்திவிட்டு, ஆட்டோவில் தப்பியோட முயற்சித்துள்ளனர். அவர்களை காவல் துறை மடக்கிப் பிடித்தது. அவர்களிடம் இருந்து 4 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என மதுரை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories