தமிழ்நாடு

தனியார்மயமாக்கலின் அடுத்த நகர்வு: தெற்கு ரயில்வேயின் டிக்கெட் பதிவு மையங்களை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு

தமிழகத்தில் உள்ள 72 ரயில் நிலையங்களின் டிக்கெட் முன்பதிவு மையங்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.

தனியார்மயமாக்கலின் அடுத்த நகர்வு: தெற்கு ரயில்வேயின் டிக்கெட் பதிவு மையங்களை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ரயில்வேயை தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் அடுத்தகட்டமாக, திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள 72 ரயில் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை தனியார் மயமாக்க மத்திய பாஜக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு எஸ்.ஆர்.எம்.யூ உள்ளிட்ட ரயில்வே தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

தனியார்மயமாக்கலின் அடுத்த நகர்வு: தெற்கு ரயில்வேயின் டிக்கெட் பதிவு மையங்களை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு

இந்நிலையில், திருச்சி ரயில்வே கோட்டத்தில் நகரங்கள் மற்றும் மாநகரங்களில் உள்ள 72 ரயில் நிலையங்களில், டிக்கெட் பதிவு மையங்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, விருத்தாச்சலம், விழுப்புரம், புதுச்சேரி, கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட ரயில் நிலைய டிக்கெட் பதிவு மையங்களுக்காக தனியாரிடம் டெண்டர் கோரப்பட்டுள்ளது. கடந்த ஆக.,19ல் தொடங்கிய இந்த டெண்டர், 23ம் தேதி முடிவடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தனியார் வசம் ஒப்படைக்கவுள்ள ரயில் டிக்கெட் பதிவு மையங்கள் மற்றும் டெண்டர் விவரங்கள் தெற்கு ரயில்வே இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

banner

Related Stories

Related Stories