தமிழ்நாடு

மாணவியை மிரட்டி தொடர்ந்து பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட மாணவர்கள் : கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம்!

கன்னியாகுமரியில் பள்ளி மாணவி ஒருவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இரண்டு மாணவர்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவியை மிரட்டி தொடர்ந்து பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட மாணவர்கள் : கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கடந்த 20ம் தேதியன்று மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் இரவு வீட்டிற்குச் செல்லாமல் பேருந்து நிலையத்தில் நீண்ட நேரமாக இருந்த பள்ளி மாணவியை போலிஸார் விசாரித்தபோது அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகில் உள்ள கிராமத்தில் கூலி வேலை செய்யும் தொழிலாளியின் மூன்று பெண்களில் முதல் மகள் இவர். இவர் மார்த்தாண்டத்தில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் பேருந்தில் பள்ளிக்குச் செல்லும்போது பேருந்தில் உடன் பயணம் செய்யும் ஐ.டி.ஐ-யில் படிக்கும் இரண்டு மாணவர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே ஐ.டி.ஐ மாணவர்களில் ஒருவருக்கு பிறந்தநாள் என்பதால், அதனைக் கொண்டாட வருமாறு அப்பெண்ணை அழைத்துள்ளனர். இதனை நம்பிச் சென்ற மாணவியை ஐ.டி.ஐ மாணவன் ஒருவன் பாலியல் வல்லுறவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதை மற்றொரு மாணவனிடம் சொல்ல, அவனும் இதனை வெளியில் சொல்லிவிடுவேன் என மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளான்.

மாணவியை மிரட்டி தொடர்ந்து பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட மாணவர்கள் : கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம்!

இதனால் மாணவி மிகுந்த மன உளைச்சலில் யாரிடமும் சொல்லாமல் பள்ளிக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். பின்னர் குடும்ப சூழல் அறிந்து மீண்டும் பள்ளிக்குச் சென்றுள்ளார். சிறிது நாட்கள் கழித்து பள்ளிக்குச் சென்ற மாணவிக்கு தொடர்ந்து அந்த மாணவர்கள் தொல்லை கொடுத்துள்ளனர். இதுபற்றி, லியோ பிராங்க்ளின் என்ற இளைஞரிடம் அந்த பெண் கூறியுள்ளார்.

இதனிடையே அந்த மாணவி மாணவர்கள் செல்லும் பேருந்தில் செல்லாமல் தினமும் தாமதமாக வேறொரு பேருந்தில் சென்றுள்ளார். 20ம் தேதியன்று மாணவியைப் பின்தொடர்ந்த லியோ பிராங்க்ளின் வீட்டிற்குச் செல்லவிருந்த மாணவியிடம நான் வாகனத்தில் வீட்டில் விடுகிறேன் எனக் கூறி அழைத்துச் சென்றுள்ளார்.

அந்த இளைஞரை நம்பி மாணவியும் சென்றுள்ளார். ஆனால் வீட்டிற்குச் செல்லாமல் திப்பிறமலை காட்டுப்பகுதிக்கு கடத்திச் சென்றுள்ளார். இதனால் மாணவி அச்சத்தில் கூச்சலிட்டுள்ளார். ஆனால், மாணவியைக் கொன்று விடுவதாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும், இதனை வெளியில் சொன்னால் உன் குடும்பத்திற்குத் தான் அசிங்கம்; உன் தங்கைகளை நினைத்துப் பார் என்று மிரட்டி மீண்டும் மார்த்தாண்டம் பேருந்து நிலையத்திலேயே இறக்கிவிட்டுச் சென்றுள்ளார்.

மாணவியை மிரட்டி தொடர்ந்து பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட மாணவர்கள் : கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம்!

தொடர் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களால் நிலைகுலைந்துபோன மாணவி செய்வதறியாமல் தவித்து வீட்டிற்கு செல்லாமல் பேருந்து நிலையத்திலேயே இருந்துள்ளார். அப்போது தான் அங்கு வந்த பெண் போலிஸார் மாணவியிடம் விசாரித்துள்ளனர்.

இதனையடுத்து மாணவி கொடுத்த புகார் மற்றும் வாக்குமூலத்தின் அடிப்படையில் லியோ பிராங்கிளின் மற்றும் ஐ.டி.ஐ மாணவர்கள் மீதும் சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஐ.டி.ஐ மாணவர்களுக்கு 17 வயது என்பதால் அவர்களை சிறுவர் சிறையில் அடைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

மேலும், மாணவிக்கு மருத்துவ பரிசோதனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. மாணவி பற்றிய தகவல்களை வெளியிடக்கூடாது என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்த பாலியல் வல்லுறவு சம்பவம் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் கதையை நினைவுபடுத்துவதாக இருக்கிறது.

banner

Related Stories

Related Stories