தமிழ்நாடு

முக்கொம்பு அணை உடைந்து ஓராண்டாகியும் அரைகுறை நிலையில் கட்டுமானப் பணிகள்: விவசாயிகள் வேதனை!

திருச்சி முக்கொம்பு அணை உடைந்து ஒருவரும் ஆன நிலையில் புதியதாக பாலம் கட்டும் பணி அஸ்திவாரத்தோடு நிற்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

முக்கொம்பு அணை உடைந்து ஓராண்டாகியும் அரைகுறை நிலையில் கட்டுமானப் பணிகள்: விவசாயிகள் வேதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி திருச்சி மாவட்டம், மணச்சநல்லூரில் உள்ள முக்கொம்பு மேலணையின் 9 மதகுகள் இடிந்து விழுந்தன.

காவிரியாற்றில் வந்த தண்ணீரை சேமித்து விவசாயிகளுக்கு வழங்க முடியாமல் போனது. மேலும் பல லட்சம் தண்ணீர் வீணாக கடலில் கலந்தது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

அணையை முறையாக பராமரிக்காததே காரணம் என விவசாயிகள், அரசியல் கட்சியினர் மற்றும் பொது மக்கள் அ.தி.மு.க-க்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அதன் பின் அப்போது திருச்சி மாவட்டக் கலெக்டர் ராஜாமணி முக்கொம்பில் முகாமிட்டு சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். பெரிய பெரிய பாராங்கற்கள், லாரிகளில் மணல் என எடுத்து வந்து கொட்டி ஒரு வழியாக தற்காலிக தடுப்பணை பணி அப்போதைக்கு முடிக்கப்பட்டது.

முக்கொம்பு அணை உடைந்து ஓராண்டாகியும் அரைகுறை நிலையில் கட்டுமானப் பணிகள்: விவசாயிகள் வேதனை!

மேலும், தண்ணீர் அதிகரித்தால், வழிந்தோடாமல் இருக்க சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இரும்பு தகடுகள் பொருத்தப்பட்டன. இந்த தற்காலிக ஏற்பாடுகளுக்கு 38.45 கோடி ரூபாய் செலவிட்டு பணிகளை மேற்கொண்டது தமிழக அரசு. இந்த பணிகள் நேற்றுடன் முடிவடைந்தன.

உடைந்த இடத்தில் பராமரிப்பு பணிகள் முடியவே ஒருவருடம் ஆனாது. இந்த உடைந்த தடுப்பணைக்கு பதிலாக புதிதாக தடுப்பணை கட்டும் பணி நிறைவடையாமல் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுவதாவது, “ஒருவருடத்திற்கு முன்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணை கட்டுவதாக அறிவித்தார். அதற்காக அடிக்கல் நாட்டி அஸ்திவாரமும் போடப்பட்டது. அதோடு அவ்வளவு தான். அந்த பணிகள் அப்படியே நின்று விட்டன. தற்போது மழைக்காலம் நெருங்கி வருவதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் வந்தால் முழு தண்ணீரும் கடலுக்குள் நிச்சயம் சென்று விடும்.

மேலும் முதல்வர் விவசாயி என மேடைக்கு மேடை கூறி வருகிறார். குறைந்த பட்சம் விவசாயத்திற்கு மிக முக்கிய தேவையாக இருக்கும் தண்ணீரை சேமிக்க முடியாமல் போனதற்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். மேலும் மக்களுக்கு ஆட்சியில் நல்லது செய்வதாக அறிவித்துவிட்டு பணிகளை முடக்கிப் போட்டிருப்பது கண்டனத்திற்குறியது.” என விவசாயிகள் வேதனையுன் தெரிவித்து வருகிறனர்

banner

Related Stories

Related Stories