தமிழ்நாடு

சென்னையில் திருட்டு பைக்கில் வந்து செல்போன் திருடி ‘கையும் களவுமாக’ மாட்டிய காதல் ஜோடி : பின்னணி என்ன ?

காதல் ஜோடி ஒன்று, சென்னை சாலைகளில் நடந்து செல்லும் பெண்ணிடம் இருந்து செல்போன் பறித்த சி.சி.டி.வி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் திருட்டு பைக்கில் வந்து செல்போன் திருடி ‘கையும் களவுமாக’ மாட்டிய காதல் ஜோடி : பின்னணி என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை தேனாம்பேட்டை அருகே சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்த பிரசன்னா லிப்ஷா என்ற இளம்பெண்ணிடம் இருந்து பைக்கில் சென்ற ஜோடி ஒன்று செல்போன் பறித்துள்ளது.

இதனையடுத்து காவல் நிலையத்தில் பிரசன்னா லிப்ஷா புகார் அளித்துள்ளார். சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது, 25 வயதுடைய இளைஞர் ஒருவர் பைக்கில் செல்லும் போது செல்போன் பறித்திருப்பது, அவரது பின்னால் இளம்பெண் ஒருவர் அமர்ந்திருப்பதும் பதிவாகியுள்ளது.

அதை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொண்டதில், செல்போனை பறித்தவர்கள் இருவரும் காதலர்கள் என்பதும், அவர்கள் சூளைமேட்டைச் சேர்ந்த ராஜூ, தாம்பரம் பல்கலைக்கழகத்தில் படித்துவரும் ஸ்வாதி என்பதும் தெரியவந்ததை அடுத்து அவர்களை போலிஸார் கைது செய்தனர்.

மேலும், ராஜூ மீது பைக் திருடிய வழக்கு ஏற்கெனவே வடபழனி காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், கடந்த 13ம் தேதி வேறொரு இருசக்கர வாகனத்தை திருடி, அதில் சென்று இரண்டு செல்போன்களை பறித்ததாகவும், திருடிய போன்களை பர்மா பஜாரில் வெறும் 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாகவும், அதில் மூலம் வரும் பணத்தை வைத்து காதலியுடன் சொகுசாக இருக்க செலவு செய்ததாகவும் ராஜூ வாக்குமூலம் அளித்துள்ளார். காதல் ஜோடி கையும் களவுமாக மாட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories