தமிழ்நாடு

’இது தமிழனின் நேர்கொண்ட பார்வை’ : வீரமான நெல்லை தம்பதிக்கு அமிதாப், ஹர்பஜன் ‘மெர்சல்’ பாராட்டு !

நெல்லையில் கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்களை அடித்து விரட்டிய வயதான தம்பதிக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

’இது தமிழனின் நேர்கொண்ட பார்வை’ : வீரமான நெல்லை தம்பதிக்கு அமிதாப், ஹர்பஜன் ‘மெர்சல்’ பாராட்டு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே கல்யாணிபுரத்தில் வசித்து வரும் விவசாயி சண்முகவேலுவின் வீட்டில் நேற்று முன் தினம் இரவு கொள்ளையர்கள் புகுந்துள்ளனர்.

அரிவாளை காட்டி மிரட்டிய கொள்ளையர்களை சண்முகவேலுவும் அவரது மனைவி செந்தாமரையும் லாவகமாக அருகில் இருந்த நாற்காலிகளை வீசி துவம்சம் செய்துள்ளனர் .

’இது தமிழனின் நேர்கொண்ட பார்வை’ : வீரமான நெல்லை தம்பதிக்கு அமிதாப், ஹர்பஜன் ‘மெர்சல்’ பாராட்டு !

இருதரப்புக்கும் இடையேயான சண்டையில் செந்தாமரை அணிந்திருந்த 4 சவரன் தங்கச் சங்கிலியை கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, போலிசில் புகாரளித்த சண்முகவேலு, தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி.,யில் பதிவான காட்சிகளையும் கொடுத்திருக்கிறார்.

அந்த சி.சி.டி.வி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முறத்தால் புலியை விரட்டியவர்கள் இன்று செருப்பினாலும், நாற்காலிகளாலும் கொள்ளையர்கள் அடித்து விரட்டியுள்ளனர் என வயதான தம்பதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், இந்த சம்பவம் குறித்த ஆங்கில செய்தி இணைப்பை ட்விட்டரில் பகிர்ந்து braaaaavoooooooo !!!!! என பாராட்டியுள்ளார்.

அதேபோல், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் தனது ட்விட்டரில் இது தொடர்பாக பதிவிட்டுள்ளார்.

அதில், பாசத்துக்கு முன்னாடி நான் பனி, பகைக்கு முன்னாடி நான் புலின்னு சொல்றா மாதிரி மெர்சல் காட்டிட்டாங்க. இது தமிழனின் நேர்கொண்ட பார்வை என குறிப்பிட்டு நெல்லை தம்பதியின் வீரச் செயலை பாராட்டியுள்ளார். இதை நெட்டிசன்கள் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories