தமிழ்நாடு

"அர்ஜுனனும் கிருஷ்ணனும்” - காஷ்மீர் விவகாரத்தில் மோடி மற்றும் அமித்ஷாவை ஏகத்துக்கும் புகழ்ந்த ரஜினி !

அமித்ஷாவும், மோடியும் கிருஷ்ணன் அர்ஜுனன் போன்றவர்கள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

"அர்ஜுனனும் கிருஷ்ணனும்” - காஷ்மீர் விவகாரத்தில் மோடி மற்றும் அமித்ஷாவை ஏகத்துக்கும் புகழ்ந்த ரஜினி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, கடந்த 2 ஆண்டுகளில் தான் செய்த பணிகளை ஆவணப்படுத்தும் வகையில் புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஏற்பாட்டில், “கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்” எனும் தலைப்பில் இந்த புத்தகம் தயாரிக்கப்பட்டது.

இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் நடைபெற்றது. முன் அறிவிப்பின்றி திடீரென நேற்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புத்தகத்தை வெளியிட்டார்.

இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார். அப்போது, '' 2 வருடங்கள் கடந்த துணை குடியரசுத் தலைவராக பணியாற்றிய வெங்கையா நாயுடுவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த நிகழ்ச்சி சென்னையில் நடப்பது நமக்கு பெருமை. அவர் முழுமையான ஆன்மீகவாதி. அவர் அரசியலுக்கான ஆளே இல்லை என்று கருதுகிறேன். எப்போதும் ஏழை மக்கள் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பார். 25 ஆண்டுகளாக வெங்கையா நாயுடுவை எனக்கு தெரியும். அவருக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கடவுள் கொடுக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.” என்றார்.

இப்படி பேசிக் கொண்டிருந்த ரஜினி, அடுத்ததாக சர்ச்சை பகுதியை எடுத்து பேசினார். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு தமிழகம் மற்றும் இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கையை பாராட்டி பேசியுள்ளார் ரஜினி. “காஷ்மீர் விவகாரத்தில் சிறப்பான நடவடிக்கையை எடுத்துள்ளார் அமித்ஷா. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தைத் திறம்பட கையாண்டது பாராட்டுக்குரியது. பாராளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய உரை சிறப்பாக இருந்தது. அமித்ஷாவும், மோடியும் கிருஷ்ணனும், அர்ஜுனனும் போன்றவர்கள். இதில் யார் கிருஷ்ணன், யார் அர்ஜுனன் என்பது அவர்கள் இருவருக்கு தான் தெரியும்'' என காஷ்மீரை பிரிக்கும் நடவடிக்கைக்கு, ரஜினி ஆதாரவாக பேசியிருப்பது கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது.

banner

Related Stories

Related Stories