தமிழ்நாடு

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு நீதிமன்ற வளாகத்தில் ‘இன்பச் சுற்றுலா’... தருமபுரி போலீசாரின் ‘பலே’ ஐடியா!

ஹெல்மெட் அணியவேண்டும் என மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தருமபுரி மாவட்ட காவல்துறையினர் புதுவித உத்தியைக் கையாண்டுள்ளனர்.

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு நீதிமன்ற வளாகத்தில் ‘இன்பச் சுற்றுலா’... தருமபுரி போலீசாரின் ‘பலே’ ஐடியா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த விதிமுறை கடுமையாகப் பின்பற்றப்படாததால், நடவடிக்கை எடுக்காத காவல்துறையினருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

சாலை விபத்துகள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், பலரும் ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை இயக்கி வருகின்றனர். சாலை விபத்துகளில் உயிரிழப்போர் பெரும்பாலும், ஹெல்மெட் அணியாததாலேயே உயிரிழப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஹெல்மெட் அணியாமல் பயணிப்போருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹெல்மெட் அணியவேண்டும் என மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தருமபுரி மாவட்ட காவல்துறையினர் புதுவித உத்தியைக் கையாண்டுள்ளனர்.

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு நீதிமன்ற வளாகத்தில் ‘இன்பச் சுற்றுலா’... தருமபுரி போலீசாரின் ‘பலே’ ஐடியா!

நேற்று காலை, தருமபுரி நகரில் போலீசார் பல்வேறு இடங்களில் அதிரடி வாகன சோதனை நடத்தினர். மாவட்ட எஸ்.பி ராஜன் உத்தரவின் பேரில் நடந்த இந்த சோதனையின்போது ஹெல்மெட் அணியாத 70 பேர் பிடிபட்டனர்.

அவர்களுக்கு அபராதம் விதிக்காமல் மன்னிப்புக் கடிதம் மட்டும் பெற்றுக்கொண்டு, போலீஸ் வாகனத்திலேயே ஏற்றி தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு இன்பச் சுற்றுலா அழைத்துச்சென்று அங்குள்ள 11 நீதிமன்றங்களையும் சுற்றி காட்டினர்.

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு நீதிமன்ற வளாகத்தில் ‘இன்பச் சுற்றுலா’... தருமபுரி போலீசாரின் ‘பலே’ ஐடியா!

இதனால், ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் அனைவரும் பணிகளுக்குச் செல்லமுடியாத சூழல் உருவானது. போலீசாரின் இந்தப் புதுவித இன்பச் சுற்றுலா திட்டம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரின் இந்தப் புதிய முயற்சிக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories