தமிழ்நாடு

காலி பால் பாக்கெட்டை என்ன செய்றீங்க..? : மெத்தன அரசு... விழிப்புணர்வில் ஈடுபட்ட காங்கிரஸ் பிரமுகர்!

மறு சுழற்சி செய்வதற்காக காலி ஆவின் பால் பாக்கெட்டுகளை கொடுத்துப் பணம் பெறும் அரசின் அறிவிப்பாணையை முறைப்படுத்தாமல் இருப்பதாக காங்கிரஸைச் சேர்ந்த அமெரிக்கை நாராயணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

காலி பால் பாக்கெட்டை என்ன செய்றீங்க..? : மெத்தன அரசு... விழிப்புணர்வில் ஈடுபட்ட காங்கிரஸ் பிரமுகர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் மறுசுழற்சி செய்யமுடியாத நெகிழி பயன்பாட்டுக்கான தடை உத்தரவு நடப்பு ஆண்டு ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்பட்டது. ஆனால் மறு சுழற்சிக்கு ஏற்புடைய நெகிழி பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் அரசு சார்பில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஆவின் பால் பாக்கெட்டுகள் மறுசுழற்சிக்கு ஏற்ற வகையிலான பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டுள்ளதால் அந்த பாக்கெட்டுகளை திருப்பி அளித்தால் ஒரு பாக்கெட்டுக்கு 10 பைசா வீதம் அளிக்கப்படும் என கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு அறிவித்தது.

காலி பால் பாக்கெட்டை என்ன செய்றீங்க..? : மெத்தன அரசு... விழிப்புணர்வில் ஈடுபட்ட காங்கிரஸ் பிரமுகர்!

ஒவ்வொரு மாதமும் 1 முதல் 5ம் தேதி வரை காலை 10-5 மணிக்குள் அருகாமையில் உள்ள ஆவின் பாலகங்கள், பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கம், ஆவின் வட்டார அலுவலகங்கள் என இவற்றில் எந்த இடத்திலும் காலி பால் பாக்கெட்டுகளை திரும்ப அளிக்கலாம் என அறிக்கை ஒன்று தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டிருந்தது.

ஆனால், இது தொடர்பாக பொதுமக்களுக்கு எவ்வித முறையான விழிப்புணர்வையும் தமிழக அரசு ஏற்படுத்தவில்லை. ஆகையால் இந்த அறிவிப்பும் மக்களிடையே முறையாகச் சென்றடையவில்லை.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமெரிக்கை நாராயணன், ப்ளாஸ்டிக் மறுசுழற்சி தொடர்பாக அரசு மற்றும் தனியார் கடைகளில் சென்று விசாரித்திருக்கிறார். அவர்களுக்கு அது தொடர்பாக எதுவும் தெரியாததால் தன்னிடம் இருந்த 210 காலி ஆவின் பால் பாக்கெட்டுகளுடன் சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஆவின் அலுவலகத்தில் ஒப்படைத்து 21 ரூபாயைப் பெற்றிருக்கிறார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், நடப்பு ஜூலை மாதத்தில் பெசன்ட் நகரில் உள்ள ஆவின் அலுவலகத்தில் தன்னுடன் சேர்த்து 3 பேர் மட்டுமே மறுசுழற்சிக்கு ஆவின் பால் பாக்கெட்டுகளை அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ப்ளாஸ்டிக் மீது வெறும் தடையை மட்டும் அறிவித்துவிட்டு அப்படியே விட்டுவிடாமல் அதற்கான மறுசுழற்சி பணிகள் நடைபெறுவது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே அரசின் தலையாய கடமை. அதனை அ.தி.மு.க அரசு செய்யத் தவறிவிட்டது என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது.

banner

Related Stories

Related Stories