தமிழ்நாடு

பயோமெட்ரிக்கிலும் இந்தி... கிடைக்கிற கேப்பில் எல்லாம் இந்தியை திணிக்க முற்படும் அரசுகள்!

தமிழகத்தில் சில மாவட்டங்களில் ஆசிரியர் வருகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் கருவியில் தமிழை புறக்கணித்து இந்தி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பயோமெட்ரிக்கிலும் இந்தி... கிடைக்கிற கேப்பில் எல்லாம் இந்தியை திணிக்க முற்படும் அரசுகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசியர்களின் வருகை பதிவை கண்காணிக்க விரல் ரேகை வருகை பதிவு (பயோமெட்ரிக்) முறை அமல்படுத்தியுள்ளது. இந்த திட்டம் கடந்த ஜூன் மாதம் முதல், தமிழகத்தில உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி ஆசியர்கள் தினசரி தலைமை ஆசிரியர் அறையில் வைக்கப்பட்டு இருக்கும் பயோமெட்ரிக் கருவியில் தங்கள் கைவிரல் ரேகையை வைத்து வருகையை உறுதி செய்வார்கள். இதன் மூலம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் நேரம் கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆசிரியர் வருகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் கருவியில் தமிழ் இல்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்டேட் செய்யப்பட்ட ஆசிரியர் வருகை பயோமெட்ரிக் கருவியில் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. பயோமெட்ரிக் கருவியில் முதலில் ஆங்கிலம் மட்டும் இருந்த நிலையில், தற்போது இந்தியும் சேர்க்கப்பட்டுள்ளது. இதைக் கண்ட ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பயோமெட்ரிக்கிலும் இந்தி... கிடைக்கிற கேப்பில் எல்லாம் இந்தியை திணிக்க முற்படும் அரசுகள்!

ஏற்கனவே தபால்துறை தேர்வில் தமிழ் மொழியில் தேர்வுகள் நடத்தப்படாது என அறிவிப்பு வெளிவந்தது. அதற்கு தமிழகத்தில் எழுந்த எதிர்ப்புக்குப் பணிந்து, இனி அஞ்சல் துறை தேர்வுகள் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் நடத்தப்படும் என அறிவித்தார் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். இந்த சர்ச்சை முடிவதற்குள் அடுத்து ஒரு பிரச்னை எழுந்துள்ளது. பா.ஜ.க-வின் இந்தி திணிப்புக்கு தமிழக அரசும் உடந்தையாக செயல்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories