தமிழ்நாடு

ஒரு வீட்டுக்கு 2 குடம்...ரேஷன் முறையில் குடிநீர் விநியோகம்: குடிநீர் தட்டுப்பாட்டால் கிராம மக்கள் அவதி!

திருவண்ணாமலை வேடந்தவாடி கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக ரேஷன் முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் அவலம் அரங்கேறியுள்ளது.

ஒரு வீட்டுக்கு 2 குடம்...ரேஷன் முறையில் குடிநீர் விநியோகம்:  குடிநீர் தட்டுப்பாட்டால் கிராம மக்கள் அவதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்த சூழலில் மாநிலம் முழுவதும் மக்கள் குடிநீருக்காக அலைந்து வருகின்றனர். உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத சூழலில் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். பத்து நாட்களுக்கு ஒருமுறை, மிகக் குறைந்தளவு குடிநீர் விநியோகம் செய்யப்படும் அவலநிலை உருவாகி உள்ளது.

பல மாவட்டங்களில் வறட்சி காரணமாக தண்ணீர் விநியோகம் 90% பகுதிகளுக்கு நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வருகிறது. மாநில அரசு தண்ணீர் பற்றாக்குறையைச் சரி செய்யப் போதுமான நடவடிக்கை எடுப்பதில்லை எனப் பலர் குற்றம் சாட்டிவருகின்றனர். தண்ணீர் பற்றாக்குறையைக் கண்டித்து மக்கள் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். பலமாவட்டங்களில்

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் கடுமையான வறட்சியை சந்தித்து வருகிறது. மாவட்டம் முழுவதும் குடிக்க தண்ணீர் இன்றிமக்கள் அல்லல்பட்டு வருகிறார். ரேஷன் முறையில் தண்ணீர் பெறுகின்ற அவல நிலைக்கு அப்பகுதி கிராமமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஒரு வீட்டுக்கு 2 குடம்...ரேஷன் முறையில் குடிநீர் விநியோகம்:  குடிநீர் தட்டுப்பாட்டால் கிராம மக்கள் அவதி!

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள வேடந்தவாடி கிராமத்தில் ஆயிரத்து 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தின் நீர் தேவைகளை அப்பகுதியில் இருந்த திறந்தவெளி கிணறுகள் இருந்தது. வறட்சியால் கிணறு வற்றிய நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்தது. இதனால், ஏரிப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறு மூலம் மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இரவு நேரங்களில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீரை மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் நிரப்பும் ஊழியர்கள், அதிகாலை 4 மணி முதல் 7மணி வரை கிராம மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்கின்றனர்.

ஒரு வீட்டுக்கு 2 குடம்...ரேஷன் முறையில் குடிநீர் விநியோகம்:  குடிநீர் தட்டுப்பாட்டால் கிராம மக்கள் அவதி!

அதிலும், வரிசையில் நிற்கும் அப்பகுதி மக்களுக்கு 2 குடம் வீதம் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. 1 வீட்டிற்கு 1 நபர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர்கள், பெண்கள் என அனைவரும் தண்ணீருக்காக நீண்ட நேரம் காத்துக்கிடக்கின்றார்.

மேலும் பலர் தங்களது ஒருநாள் ஊதியத்தை இழக்க வேண்டியுள்ளது என அப்பகுதியில் வேலைக்கு செல்லும் ஆண்களும், பெண்களும் பெரும் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து சம்பந்த பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories