தமிழ்நாடு

இன்று தொடங்குகிறது சிறப்பு பிரிவினருக்கான MBBS, BDS கலந்தாய்வு!

எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று சென்னையில் தொடங்குகிறது. முதல் நாளான இன்று சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

இன்று தொடங்குகிறது சிறப்பு பிரிவினருக்கான MBBS, BDS கலந்தாய்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 3,968 எம்.பி.பி.எஸ். இடங்களும், 1,070 பி.டி.எஸ். இடங்களும் உள்ளன. இதேபோல், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 852 எம்.பி.பி.எஸ். இடங்களும், 690 பி.டி.எஸ். இடங்களும் உள்ளன.

நடப்பு ஆண்டில் மேற்குறிப்பிட்ட மருத்துவ இடங்களுக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட நிலையில், அரசு ஒதுக்கீட்டு மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் தொடங்குகிறது.

முதல் நாளான இன்று மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவு, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் பங்கேற்பதற்காக 558 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை (ஜூலை 9) தொடங்கி வருகிற 13ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன் பிறகு நிர்வாக ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புக்கான கலந்தாய்வு நடைபெறும்.

banner

Related Stories

Related Stories