தமிழ்நாடு

விபரீதத்தில் முடிந்த டிக்-டாக் தொடர்பு : கைக்குழந்தையுடன் கைது செய்யப்பட்ட நர்ஸ் !

டிக்-டாக் செயலி மூலம் 16 வயது சிறுவனுடன் பழகி, கடத்திச் சென்று குடும்பம் நடத்திய செவிலியர் ஒருவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விபரீதத்தில் முடிந்த டிக்-டாக் தொடர்பு : கைக்குழந்தையுடன் கைது செய்யப்பட்ட நர்ஸ் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டிக்-டாக் செயலியால் சமூகத்தில் கலாசார சீர்கேடு எளிதில் நடைபெறுவதாகக் கோரி சென்னை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. அதில் அந்த செயலிக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு பிறகு நீக்கப்பட்டிருந்தது. இருப்பினும், நீதிமன்றத்தில் டிக் டாக் செயலி தொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில், டிக்-டாக் செயலி மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் நர்ஸ் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிண்டியில் தங்கி தொழிற்பயிற்சி படிப்பு படித்த தேனியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், சமீப காலங்களாக டிக் டாக் செயலில் வீடியோக்களை அன்றாடம் பதிவிட்டு வந்துள்ளான். அச்சிறுவனின் வீடியோக்களை டூயட் செய்து தஞ்சையைச் சேர்ந்த நர்ஸ் ஒருவர் டிக்-டாக்கில் பதிவிட்டிருந்தார்.

காலப்போக்கில் இருவரும் டிக்-டாக் மூலம் பழகியுள்ளனர். பின்னர் கடந்த அக்டோபர் மாதம் முதல் சிறுவனை காணவில்லை என சென்னை கிண்டி போலீசாரிடம் தந்தை புகாரளித்துள்ளார். அவரின் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் உயர் நீதிமன்றத்தில் 4 முறை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த பின்னர் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

அதில், சிறுவனின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்ததில், திருப்பூரை அடுத்த ஊத்துக்குளியில் அவர் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், தஞ்சையைச் சேர்ந்த செவிலியர் ஒருவர் சிறுவனுடன் பழகியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அந்த நர்ஸிடம் பிறந்த சில நாட்களே ஆன குழந்தையும் இருந்தது.

இதனையடுத்து பெண்ணிடம் விசாரித்தபோது, வீட்டில் பார்த்த மணமகனை பிடிக்காமல் சென்னைக்கு தப்பி வந்ததாகவும், அங்கு டிக்-டாக் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் தானும், அந்த சிறுவனும் திருமணம் செய்துகொண்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், அந்தக் குழந்தை எங்கள் இருவருக்கும் பிறந்தது என்றும் குறிப்பிட்டார்.

பின்னர், மேஜராகாத சிறுவனுடன் திருமணம் செய்து கொண்டதால், பாலியல் வழக்குகளுக்கான போக்ஸோ சட்டம் மற்றும் ஆட்கடத்தல் சட்டத்தில் நர்ஸை சிறையில் அடைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறுவனையும் காப்பகத்துக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டது.

banner

Related Stories

Related Stories