தமிழ்நாடு

வேலூர் தேர்தல் தடைக்கு தி.மு.க. காரணம் அல்ல - துரைமுருகன் பேட்டி

வேலூர் மக்களவைத் தேர்தலின் போது சட்டம் ஒழுங்கு, ஊழல் பிரச்னையை முன்னிறுத்தி பரப்புரை மேற்கொள்வோம் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் தேர்தல் தடைக்கு தி.மு.க. காரணம் அல்ல - துரைமுருகன் பேட்டி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் போது அ .தி.மு.க.,வின் முறைகேட்டினால் வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த வாரம் வேலூர் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இதனையடுத்து, வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க பொருளாளர் துரைமுருகன், “வேலூரில் தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு நாங்கள் காரணம் அல்ல. வருமான வரித்துறையினருக்கும் எங்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை.

எங்களுக்கு சொந்தமான வீடு, கல்லூரிகளில் சோதனை செய்துவிட்டு எதுவும் பிடிபடவில்லை என்று எழுதி கொடுத்துதான் சென்றுள்ளனர்” என்று கூறினார்.

மேலும், “தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தற்காலிக ஆட்சிக்கு விரைவில் முடிவு வரும் என்ற அவர், சட்டம் ஒழுங்கு பிரச்னை, ஊழல் போன்றவற்றை முன்னிறுத்தி பிரசாரத்தில் ஈடுபடுவோம்” எனவும் துரைமுருகன் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories