தமிழ்நாடு

காஞ்சிபுரம் : போலீசார் திட்டியதால் மனமுடைந்து தீக்குளித்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு!

காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம் நடைபெறும் இடத்தில் ஷேர் ஆட்டோவிற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் தீக்குளித்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் : போலீசார் திட்டியதால் மனமுடைந்து தீக்குளித்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் பெருவிழா நடைபெற்று வருகிறது. பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்கு மினி பேருந்து மற்றும் ஆட்டோக்களை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டு, போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக காவல்துறையினர் ஆட்டோக்களை அனுமதிக்க மறுத்து உள்ளனர்.

இதுகுறித்து காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவரிடம், ஷேர் ஆட்டோ ஓட்டுநர் குமார் என்பவர் கேட்டுள்ளார். அதற்கு போலீசார், தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த குமார் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்துள்ளார்.

தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநர் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடலை மீட்ட போலீசார் காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories